அக்டோபருக்குள் இந்தியாவில் 70 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்படுவர் – ஆய்வில் அதிர்ச்சி தகவல்!!

0

ஹைதராபாத்தின் பிட்ஸ் பிலானி ஆராய்ச்சியாளர்கள் குழு நடத்திய ஆய்வில் அக்டோபர் மாதத்தின் முதல் வாரத்திற்குள் இந்தியாவில் 70 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவர் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. இது அமெரிக்காவையும் மிஞ்சி அதிக எண்ணிக்கையிலான பாதிப்புகளை கொண்ட நாடாக இந்திய உருவெடுக்கும் என ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.

கொரோனா பாதிப்பு:

இந்தியாவில் ஊரடங்கில் வழங்கப்பட்ட தளர்வுகளை தொடர்ந்து நாள்தோறும் 90 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்படுகிறது. மேலும் தினசரி ஆயிரக்கணக்கனோர் உயிரிழக்கின்றனர். மத்திய சுகாதார அமைச்சகத்தின் அறிக்கையின் படி, இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 45 லட்சத்தை எட்டியுள்ளது. அதே நேரத்தில் அமெரிக்காவில் தற்போது வரை 65 லட்சத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.

ENEWZ – சமூக வலைதள பக்கங்களில் சேர கிளிக் பண்ணுங்க!!

taking samples for covid 19 test
taking samples for covid 19 test

இந்த ஆண்டிற்கான அமைதிக்கான நோபல் பரிசு – பரிந்துரைக்கப்பட்ட டிரம்ப்!!

ஹைதராபாத்தின் பிட்ஸ் பிலானி ஆராய்ச்சியாளர்கள் குழு மேம்பட்ட புள்ளிவிவர கற்றல் நுட்பங்களைப் பயன்படுத்தி இந்தியாவில் தொற்று குறித்து ஆராய்ச்சியில் ஈடுபட்டது. இக்குழு சமீபத்தில் தனது கண்டுபிடிப்புகளை வெளியிட்டு உள்ளது. அதில் உலகில் கொரோனா அதிகம் பாதித்த நாடுகளில் முதல் இடத்திற்கு இந்தியா செல்லும். அக்டோபர் முதல் வாரத்தில் தொற்று எண்ணிக்கை அமெரிக்காவை மிஞ்சிவிடும். அதாவது சுமார் ஒரு மாதத்தில் மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 70-லட்சத்தை தாண்டக்கூடும். இருப்பினும், மேற்கொள்ளப்படும் சோதனைகளின் எண்ணிக்கையை பொறுத்து பாதிப்பு எண்ணிக்கை உள்ளது “என்று டாக்டர் ராதிகா தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here