பல்கலைக்கழக இறுதிப்பருவ தேர்வுகள் தேதி மாற்றம் – நிர்வாகம் சுற்றறிக்கை!!

0
Exams
Exams

புதுச்சேரி பல்கலைக்கழக இறுதி செமஸ்டர் தேர்வுகள் செப்டம்பர் 14ம் தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில் தற்போது அதில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. இது தொடர்பாக பல்கலை நிர்வாகம் வெளியிட்டு உள்ள சுற்றறிக்கையில் தேர்வுகள் செப்டம்பர் 21 முதல் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

தேர்வு தேதி மாற்றம்:

இந்தியாவில் கொரோனா பாதிப்பு காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டு உள்ளன. இதனால் பள்ளி ஆண்டுத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. கல்லூரி மாணவர்களுக்கும் இறுதி செமஸ்டர் தவிர பிற தேர்வுகள் ரத்தாகி உள்ளன. யுஜிசி அறிவுறுத்தலின்படி செப்டம்பர் 30ம் தேதிக்குள் தேர்வுகளை நடத்தி முடிக்க பல்கலைக்கழகங்கள் தயாராகி வருகின்றன. தமிழகத்தில் செப்டம்பர் 15 முதல் இறுதிப்பருவ தேர்வுகள் தொடங்க உள்ள நிலையில் அதற்கான ஏற்பாடுகள் மும்மரமாக நடைபெற்று வருகிறது.

ENEWZ – சமூக வலைதள பக்கங்களில் சேர கிளிக் பண்ணுங்க!!

Puducheery University
Pondicherry University

இந்நிலையில் புதுச்சேரி பல்கலை மற்றும் அதன் கீழ் இயங்கும் உறுப்பு கல்லூரிகளில் செப் 14 முதல் 19ம் தேதி வரை இறுதிப்பருவ தேர்வுகள் நடைபெறும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. தற்போது தேர்வு தேதியில் மாற்றம் கொண்டு வரப்பட்டு உள்ளது.

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது?? வெளியான தகவல்!!

இது குறித்து புதுச்சேரி பல்கலை வெளியிட்டு உள்ள சுற்றறிக்கையில், யுஜிசி மற்றும் உச்சநீதிமன்றத்தின் வழிகாட்டுதல்கள் படி தேர்வுகள் நடத்தப்பட உள்ளது. மேலும் ஆன்லைன், ஆப்லைன் மற்றும் இரண்டு முறைகளும் கலந்து தேர்வுகள் நடைபெறும் எனவும், இது குறித்து மாணவர்களின் விருப்பத்தின் பேரில் அந்தந்த கல்லூரி நிர்வாகங்கள் முடிவு செய்து கொள்ளலாம். இதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வரும் நிலையில் செப்டம்பர் 21ம் தேதி முதல் தேர்வுகள் தொடங்கும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here