
சிறகடிக்க ஆசை சீரியலில் மனோஜ் விஜயாவை பற்றி தெரியாமல் ரோகிணி எல்லா உண்மையும் மறைத்து பணக்கார வீட்டு பெண்ணாக ஏமாற்றி வருகிறார். இந்த விஷயம் விஜயாவுக்கு தெரிந்தால் அன்றைக்கு தான் கச்சேரியே இருக்கு. மேலும் இந்த உண்மை எப்போது தெரியவரும் என்று தான் ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் உள்ளனர். இப்படி இருக்கையில் புதிய அப்டேட் ஒன்று வெளியாகி உள்ளது.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
அதாவது ரோகிணியின் அம்மா சென்னைக்கு வந்த இடத்தில் ரோட்டில் மயங்கி விழுகிறார். அப்போது அந்த வழியாக வரும் முத்து, மீனா பார்த்து ஹாஸ்பிடலில் சேர்க்கின்றனர். பின் அவர்களை பார்த்துக்கொள்ள யாருமே இல்லாததால் முத்து, மீனாவும் கிரிஷ்ஸை வீட்டுக்கு தூக்கிட்டு வருவார்களாம். முத்து உடன் கிரிஷ் வருவதை பார்த்த ரோகிணி அதிர்ச்சியாவாராம். மேலும் கிரிஷ் மூலம் தான் விஜயாவுக்கு அனைத்து உண்மைகளும் தெரியவருமாம்.