அசைவ சுவையை அள்ளித்தரும் காலிபிளவர் கிரேவி., கொஞ்சம் இந்த மாதிரி ட்ரை பண்ணி பாருங்க., டேஸ்ட் தாறுமாறா இருக்கும்!!

0
அசைவ சுவையை அள்ளித்தரும் காலிபிளவர் கிரேவி., கொஞ்சம் இந்த மாதிரி ட்ரை பண்ணி பாருங்க., டேஸ்ட் தாறுமாறா இருக்கும்!!

பொதுவாக அசைவ பிரியர்கள் வீட்டில் சைவ ரெசிபி சமைத்தாலே சரியாக சாப்பிட மாட்டார்கள். இதனால் இன்று சைவ உணவான காலிஃப்ளவரை வைத்து நான்வெஜ் சுவையில் சூப்பரான ஒரு ரெசிபி சமைப்பது எப்படி என்ற பார்க்கலாம் வாங்க.

தேவையான பொருட்கள்;

  • பெரிய வெங்காயம் – 2
  • தக்காளி – 2
  • சோம்பு – 1/ 2 டீஸ்பூன்
  • உப்பு – தேவையான அளவு
  • கரம் மசாலா – 1/2 ஸ்பூன்
  • மிளகு – 1/2 டீஸ்பூன்
  • சீரகம் – 1/2 டீஸ்பூன்
  • சோம்பு – 1/2 டீஸ்பூன்
  • கசகசா – 1/4 டீஸ்பூன்
  • வர மல்லி – 1/ டீஸ்பூன்
  • வர மிளகாய் – 5
  • சின்ன வெங்காயம் – 7
  • தேங்காய் – அரை மூடி

செய்முறை விளக்கம்;

இந்த ரெசிபி செய்வதற்கு ஒரு கடாயில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி 1/2 டீஸ்பூன் மிளகு, 1/2 டீஸ்பூன் சீரகம், 1/2 டீஸ்பூன் சோம்பு, 1/4 கசகசா சேர்த்துக் கொள்ளவும். இதன் பிறகு சிறு துண்டு இஞ்சி, 5 பல் பூண்டு சேர்த்து நன்றாக வதக்கவும். மேலும் அதோடு 1 டீஸ்பூன் வர மல்லி , 5 வரமிளகாய், 7 சின்ன வெங்காயம், அரை மூடி தேங்காய் சேர்த்து நன்றாக வதக்கவும். பின்னர் இதை ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு பேஸ்ட் பக்கத்துக்கு அரைத்து வைத்துக் கொள்ளவும்.

இப்போது கடாயில் ஒரு 100ml எண்ணெய் ஊற்றி அதில் நாம் சுத்தம் செய்து வைத்துள்ள காலிபிளவரை போட்டு பொரித்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும். மேலும் அதே கடாயில் அரை டீஸ்பூன் சோம்பு போடவும். அதன் பிறகு நறுக்கி வைத்துள்ள பெரிய வெங்காயம், தக்காளி போட்டு நன்றாக வதக்கி கொள்ளவும். பிறகு அதில் 1/2 டீஸ்பூன் கரம் மசாலா, அரைத்து வைத்திருக்கும் மசாலாவையும் சேர்த்து நன்றாக கொதிக்க விடவும்.

இப்போது இதில் நாம் பொரித்து வைத்திருக்கும் காலிபிளவரை அதில் போட்டு நன்றாக கொதிக்க விடவும். பின்னர் அதில் 1 கப் தண்ணீர் ஊற்றி கடாயை மூடி போட்டு மூடவும். மேலும் ஒரு 20 நிமிடங்களுக்கு பின் அடுப்பை ஆப் செய்து கொள்ளவும். இப்பொழுது நமக்கு அசைவ சுவையில் காலிபிளவர் கிரேவி ரெடி.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here