
சிறகடிக்க ஆசை சீரியலில் அண்ணாமலை என்னதான் மீனா மேல் கோபமாக இருந்தாலும் அவர் வீட்டுக்கு வந்தால் தான் நான் மாத்திரை சாப்பிடுவேன் என அடம் பிடிக்கிறார். வேறு வழி இல்லாமல் முத்துவும் வீட்டிற்கு அழைத்து வருகிறார். ஆனால் இது விஜயாவுக்கு சுத்தமாக பிடிக்கவில்லை. இப்படி இருக்கையில் இந்த சீரியலில் அடுத்து வரும் எபிசோடு குறித்து அப்டேட் வெளியாகியுள்ளது. அதாவது மீனாவை சூசகமாக வீட்டுக்குள் அழைத்த அண்ணாமலை அடுத்ததாக ரவியையும் ஸ்ருதியையும் வீட்டுக்கு அழைத்து வரலாம் என யோசிப்பாராம்.
Enewz Tamil WhatsApp Channel
அது மட்டுமல்லாமல் ரவியிடம் பேசி நீயும் மருமகளும் வீட்டுக்கு வாங்க என்று சொல்வாராம். இருவரும் வீட்டிற்கு வருவதை பார்த்து குடும்பத்தில் உள்ளவர்கள் அதிர்ச்சியாவார்களாம். பின் அவர்களை வீட்டை விட்டு துரத்த அண்ணாமலை நான்தான் வர சொன்னேன் என்பாரம். இதைக் கேட்ட முத்து ரவி வீட்டுக்குள் வந்தால் நான் உங்களுக்கு பிள்ளையே கிடையாது. இந்த வீட்டை விட்டு வெளியே போயிடுவேன் என்பாரம். இதனால் அண்ணாமலை என்ன முடிவு எடுப்பது என்பது தெரியாமல் தவிப்பாராம்.