
பாக்கியலட்சுமி சீரியலில் செழியன், மாலினி விஷயம் ஜெனிக்கு தெரிந்தால் அவரின் நிலைமை என்ன ஆகும் என ஒவ்வொரு நாளும் பாக்கியா பதறிக் கொண்டிருக்கிறார். இன்னொரு புறம் எழில் வாழ்க்கை கேள்விக்குறியாக மாறியுள்ளது. இப்படி இருக்கும் சூழலில் இந்த சீரியலில் அடுத்து வரும் எபிசோடு குறித்து அப்டேட் வெளியாகியுள்ளது. அதாவது பாக்கியா கணேஷிடம் வீட்டில் பேசுவதற்கு இன்னும் ஒரு மாதம் டைம் கேட்டுள்ளார்.
Enewz Tamil WhatsApp Channel
ஆனால் கணேஷ் என்னால் அவ்வளவு நாளெல்லாம் பொறுத்துக் கொள்ள முடியாது என சொல்வாராம். மேலும் நீங்கள் இன்னும் இரண்டு நாட்களில் அமிர்தா எழிலிடம் உண்மையை சொல்லவில்லை என்ற நிச்சயம் உங்கள் வீட்டில் உள்ள எல்லாரிடமும் வந்து நான் பேசுவேன் என பிளாக்மெயில் செய்வாராம். கடைசியில் பாக்கியா என்ன செய்வதென்று தெரியாமல் அமிர்தாவை மட்டும் தனியாக அழைத்து நடந்த விஷயத்தை சொல்லி எழிலுடன் சேர்ந்து வாழ சொல்வாராம். இதுதான் அடுத்து வரும் எபிசோடுகளில் அரங்கேறுமாம்.