‘இசையமைப்பாளராகும் பிரபல பின்னணி பாடகி…..,இசைப்புயல் வாழ்த்து….,

0
'இசையமைப்பாளராகும் பிரபல பின்னணி பாடகி.....,இசைப்புயல் வாழ்த்து....,
'இசையமைப்பாளராகும் பிரபல பின்னணி பாடகி.....,இசைப்புயல் வாழ்த்து....,

தமிழ் சினிமாவில் வெளியான ‘கடல்’ என்ற சூப்பர் ஹிட் திரைப்படத்தில் இடம்பெற்றிருந்த ‘நெஞ்சிக்குள்ள’ என்ற பாடல் மூலம் பின்னணி பாடகியாக அறிமுகமானவர் பாடகி சக்தி ஸ்ரீ கோபாலன். வித்தியாசமான குரலால் ரசிகர்களை கட்டி இழுத்த பாடகி சக்தி ஸ்ரீ கோபாலன், தமிழ் சினிமாவிற்கு என் உச்சிமண்டை, மக்காயாலா, எங்க போனா ராசா, வாயா என் வீரா போன்ற சூப்பர் ஹிட் பாடல்களை கொடுத்துள்ளார்.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

சமீபத்தில் வெளியான ‘பொன்னியின் செல்வன் 2’ திரைப்படத்தில் இடம்பெற்றிருந்த ‘அகநக’ என்ற பாடலை பாடி இருந்தார் சக்தி ஸ்ரீ கோபாலன். இதுவரை சினிமாவில் பின்னணி பாடி வந்த சக்தி ஸ்ரீ கோபாலன் விரைவில் இசையமைப்பாளராக அறிமுகமாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

‘அக நக அக நக முக நகயே’….,குந்தவை த்ரிஷாவின் பர்த்டே செலிபிரேஷன் – வைரலாகும் புகைப்படம்….,

அதாவது, நடிகை நயன்தாரா, மாதவன், சித்தார்த் உள்ளிட்ட பிரபலங்கள் நடிக்கும் ‘டெஸ்ட்’ திரைப்படத்திற்கு இசையமைக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த திரைப்படத்தை எஸ்.சஷிகாந்த் இயக்குகிறார். இப்போது, இசையமைப்பாளராக அறிமுகமாக இருக்கும் சக்தி ஸ்ரீ கோபாலனுக்கு இசைப்புயல் ஏ.ஆர் ரகுமான் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here