‘அக நக அக நக முக நகயே’….,குந்தவை த்ரிஷாவின் பர்த்டே செலிபிரேஷன் – வைரலாகும் புகைப்படம்….,

0
'அக நக அக நக முக நகயே'....,குந்தவை த்ரிஷாவின் பர்த்டே செலிபிரேஷன் - வைரலாகும் புகைப்படம்....,
'அக நக அக நக முக நகயே'....,குந்தவை த்ரிஷாவின் பர்த்டே செலிபிரேஷன் - வைரலாகும் புகைப்படம்....,

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவர் நடிகை த்ரிஷா. கடந்த 1999 ஆம் ஆண்டு வெளியான ‘ஜோடி’ திரைப்படத்தில் சப்போர்டிங் கதாப்பாத்திரத்தில் நடித்திருந்த நடிகை த்ரிஷா ‘மெளனம் பேசியதே’ திரைப்படம் மூலம் நடிகையாக அறிமுகமானார். இதையடுத்து, லேசா லேசா, எனக்கு 20 உனக்கு 18, உனக்கும் எனக்கும், சாமி, VTV என அடுத்தடுத்து தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகர்களுடன் ஜோடி போட்டார்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

அந்த வகையில், கமல், ரஜினி துவக்கி விஜய், அஜித், சிம்பு, ஜெயம்ரவி என தமிழ் சினிமாவின் அனைத்து நடிகர்களும் த்ரிஷாவுடன் ஜோடி போட்டுள்ளனர். தற்போது த்ரிஷாவின் நடிப்பில் வெளியான ‘பொன்னியின் செல்வன் 2’ திரைப்படம் உலகளவில் எக்கச்சக்கமான வசூல் குவித்து வருகிறது. இதையடுத்து, 5 ஆவது முறையாக நடிகர் விஜயுடன் ஜோடி சேர்ந்து ‘லியோ’ திரைப்படத்தில் நடித்து வருகிறார் த்ரிஷா.

IPL 2023: கொல்கத்தா அணி பேட்டிங் தேர்வு….,

இந்த நிலையில், நடிகை த்ரிஷா தனது குடும்பத்தார் அனைவருடன் சேர்ந்து தனது 40 ஆவது பிறந்த நாளை கேக் வெட்டி கொண்டாடி வருகிறார். இந்த கொண்டாட்டம் தொடர்பான புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவிட்ட நடிகை த்ரிஷா, ‘உங்களின் அதிகப்படியான அன்பிற்கும், வாழ்த்துகளுக்கும் என் இதயம் கனிந்த நன்றிகள்’ என குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here