லாக்டவுனில் காதலருடன் நேரத்தை கழிக்கும் பிக் பாஸ் பிரபலத்தின் மகள் – வைரலாகும் புகைப்படங்கள்!!

0

பிரபல தமிழ் சினிமா நடிகையான ஸ்ருதி ஹாசன் தற்போது லாக்டவுனை தனது காதலனுடன் கழித்து வருகிறார். தற்போது அதற்கான புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஸ்ருதிஹாசன்:

உலக நாயகனின் மூத்த மகளும், தமிழ், ஹிந்தி சினிமாவின் பிரபல நடிகையும் பாடகியும் தான் ஸ்ருதிஹாசன். இவரது நடிப்பில் பல படங்கள் வெளியாகி பாதி ஹிட் பாதி பிளாப் அடைந்துள்ளது. இவர் கடைசியாக தற்போது விஜய்சேதுபதியுடன் லாபம் படத்தில் நடித்து வருகிறார். அந்த படத்தின் இயக்குனர் சில தினங்களுக்கு முன்பு தான் உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இவரை பற்றி அவ்வப்போது சில கிசுகிசுக்கள் வெளிவந்த வண்ணம் இருந்து வருகிறது. அந்த வகையில் சில மாதங்களுக்கு முன்பு இவர் வெளிநாட்டு நபர் ஒருவரை காதலித்து வருவதாக தகவல் வெளியானது. ஆனால் அது பிரேக்கப் ஆனது. தற்போது அவர் மீண்டும் காதல் வலையில் விழுந்துள்ளார்.

அதன்படி அவர் சாந்தனு ஹசாரிக்கா என்பவரை காதலித்து வருவதாக சினிமா வட்டாரங்களில் கூறப்படுகிறது. மேலும் தற்போது கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு உத்தரவு விதிக்கப்பட்டுள்ளது. இந்த நேரத்தில் ஸ்ருதி ஹாசன் தனது காதலனுடன் நேரத்தை செலவழித்து வருகிறார். மேலும் அவருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தையும் தற்போது வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படம் காட்டுதீயாக இணையத்தில் பரவி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here