சிவகார்த்திகேயனுடன் இணையும் குக் வித் கோமாளி சிவாங்கி – கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!!

0

தனது நகைச்சுவை மூலம் அனைவரையும் சிரிக்க வைத்து வரும் ஷிவாங்கி தற்போது சிவகார்த்திகேயனுடன் இணைந்து திரைப்படத்தில் நடிக்கப்போகிறார். தற்போது அதற்கான அதிகாரபூர்வமான அறிவிப்பு வெளிவந்துள்ளது. இதனால் சிவாங்கியின் ரசிகர்கள் குஷி அடைந்துள்ளனர்.

சிவாங்கி:

சூப்பர் சிங்கர் மூலம் அறிமுகமான சிவாங்கி தனது இசையின் மூலம் மக்களின் மனதில் நீங்கா இடத்தை பிடித்தார். அதுமட்டுமல்லாமல் அவரின் குழந்தைத்தனமான செயல் அனைவராலும் கவரப்பட்டது. சூப்பர்சிங்கருக்கு அடுத்ததாக சிவாங்கி குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக வலம் வந்தார். இந்த நிகழ்ச்சியை பெரும்பாலும் ரசிகர்கள் சிவாங்கியின் அளப்பறைகளை பார்ப்பதற்காகவே பார்க்கின்றனர் என்று தான் சொல்லவேண்டும்.

Telegram Channel  => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!

அந்த அளவிற்கு அவரது நகைச்சுவை மூலம் ரசிகர்கள் அனைவரையும் கட்டி வைத்துள்ளார் சிவாங்கி. மேலும் சமூக வலைத்தளங்களில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியை ரசிகர்கள் குக் வித் சிவாங்கி என்று கூறி வருகின்றனர். அந்த அளவிற்கு இந்த நிகழ்ச்சியில் பெரும் பங்கு வகிக்கிறார் சிவாங்கி. தற்போதைய காலத்தில் பெண் நகைச்சுவையாளர்கள் மிக குறைவு. அதுவும் இளம் பெண் நகைச்சுவையாளர்கள் இல்லவே இல்லை என்று தான் சொல்லவேண்டும். தற்போது அந்த குறைய சிவாங்கி நீக்கியுள்ளார்.

சிவகார்த்திகேயனுடன் இணையும் சிவாங்கி:

தற்போது சிவகார்த்திகேயன் தனது புதிய திரைப்படமான டான் படத்தில் பிசியாக இருந்து வருகிறார். அந்த படத்தை அறிமுக இயக்குனர் சிபி.சக்கரவர்த்தி இயக்குகிறார். இதற்கு அனிருத் இசையமைக்கிறார். சில தினங்களுக்கு முன்பு குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு சென்ற சிவகார்த்திகேயன் எனக்கு சிவாங்கி மாதிரி தங்கை இல்லை என்றும் கூறினார்.

சென்னை போயஸ் கார்டனில் நடிகர் தனுஷின் புதுவீடு பூமி பூஜை – ரஜினிகாந்த் பங்கேற்பு!!

தற்போது அவர் தனது படத்தில் நடிப்பதற்கு சிவாங்கிக்கு வாய்ப்பு வழங்கியுள்ளார். இதனால் சிவாங்கியின் ரசிகர்கள் குஷி அடைந்துள்ளனர். இவ்வளவு நாட்களாக சின்னத்திரையில் சிவாங்கியை பார்த்து கொண்டிருந்த ரசிகர்கள் தற்போது பெரிய திரையில் பார்ப்பதற்காக காத்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here