உச்சத்தை தொட்ட பெட்ரோல், டீசல் விலை – இன்றைய நிலவரம்!!

0

பெட்ரோல் மற்றும் டீசலின் இன்றைய விலை பற்றிய தகவல் தற்போது வெளியாகியுள்ளது. யாரும் எதிர்பாராத வகையில் பெட்ரோலின் விலை இன்றைய நிலவரப்படி புதிய உச்சத்தை தொட்டுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் கவலை அடைந்துள்ளனர்.

பெட்ரோல் மற்றும் டீசலின் விலை நிலவரம்:

நாள்தோறும் பெட்ரோல் மற்றும் டீசலின் விலையை எண்ணெய் நிறுவனங்கள் அன்றைய நடைமுறைக்கேற்ப மாற்றி அமைத்து வந்தனர். கடந்த மாதம் 27ம் தேதியில் இருந்து பெட்ரோல் மற்றும் டீசலின் விலையில் மாற்றம் செய்யப்படாமல் விற்பனை செய்யப்பட்டது. ஆனால் அதன்பிறகு கடந்த 4ம் தேதி முதல் விலையை மாற்றம் செய்து வந்தனர் எண்ணெய் நிறுவனங்கள். அதன்பிறகு தொடர் அதிகரிப்பில் தான் இருந்து வருகிறது. தற்போது இன்றைய நிலவரப்படி பெட்ரோல் விலையில் புதிய உச்சத்தை தொட்டுள்ளது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

ஆபாசப் படம் தயாரித்த நடிகை கைது – லட்சக்கணக்கில் பணம் பறிமுதல்!!

சென்னையில் நேற்று பெட்ரோல் லிட்டருக்கு ரூ.89.96 ஆகவும் டீசல் லிட்டருக்கு ரூ.82.90 ஆகவும் விற்பனை செய்யப்பட்டு வந்தது. தற்போது இன்றைய நிலவரப்படி பெட்ரோல் லிட்டருக்கு 22 காசுகள் உயர்ந்து புதிய உச்சத்தை தொட்டுள்ளது. அதன்படி தற்போது பெட்ரோல் 1 லிட்டர் ரூ.90.18க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும் டீசல் லிட்டருக்கு ரூ.28 காசுகள் உயர்ந்து தற்போது 1 லிட்டர் 83.18க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த விலை இன்று காலை முதல் அமலுக்கு வந்துள்ளது. இந்த விலை ஏற்றதினால் வாகன ஓட்டிகள் கவலை அடைந்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here