பருவமடைந்து விட்டாலே ஒரு பெண் திருமணம் செய்து கொள்ளலாம் – மும்பை உயர் நீதிமன்றம் தீர்ப்பு!!

0

இந்திய திருமண சட்டப்படி ஒரு பெண்ணுக்கு திருமண வயது 18 ஆக நிர்ணயிக்கப்பட்டிருக்கும் நிலையில் மும்பை உயர் நீதிமன்றம் ஒரு வழக்கு விசரணையில் “ஒரு பெண் பருவமடைந்து விட்டாலே அவர் தனது வாழ்க்கை துணையை தேர்ந்தெடுப்பதற்கு தகுதி உடையவராகிறார்” என்று தீர்ப்பளித்துள்ளது. இத்தீர்ப்பு தற்போது மக்களிடையே பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

நீதிமன்ற தீர்ப்பு:

பஞ்சாபை சேர்ந்த 37 வயதான இஸ்லாமிய நபர் ஒருவரும் 17 வயதான இஸ்லாமிய பெண் ஒருவரும் காதலித்து சமீபத்தில் திருமணம் செய்து கொண்டனர். இத்திருமணத்தில் விருப்பமில்லாத பெண்ணின் பெற்றோர் பெண்ணுக்கு திருமண வயது வரவில்லை, எனவே இந்த திருமணம் செல்லாது எனக்கூறி தங்களது மகளை மீட்டு காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

அரசியலுக்கு வரும் நடிகர் சிவாஜியின் மகன் ராம்குமார் – பாஜக.,வில் ஐக்கியம்!!

இந்நிலையில் அந்த தம்பதிகள் “இஸ்லாமிய திருமண சட்டப்படி 18 வயதை அடையாவிட்டாலும் பருவமடைந்து விட்டாலே ஒரு பெண் திருமணம் செய்து கொள்ள தயாராகி விடுகிறார்” என்பதை குறிப்பிட்டு தங்கள் திருமணத்தை அங்கீகரிக்கவும் தங்களுக்கு பாதுகாப்பு தரும்படியும் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இவ்வழக்கை விசாரித்த மும்பை உயர் நீதிமன்றம் அவர்களது திருமணம் செல்லும் என தீர்ப்பளித்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here