சின்னத்திரை நடிகை சித்ரா மர்ம மரணம் – இன்று உடற்கூறாய்வு, சக நடிகர்களிடம் விசாரணை!!

0

பிரபல சின்னத்திரை நடிகை சித்ரா மர்ம மரணம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ள நிலையில், இன்று கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் உடற்கூறாய்வு நடைபெற உள்ளது. இதன் முடிவில் அவரது மரணம் கொலையா? அல்லது தற்கொலையா? என்பது தெரியவரும் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். அதுமட்டுமின்றி அவரது சக நடிகர்களிடம் இன்று விசாரணை நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது.

சித்ரா மரணம்:

விஜே வாக தனது திரைப்பயணத்தை தொடங்கி பிரபல தனியார் தொலைக்காட்சியில் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியல் மூலம் மக்கள் மனதில் முல்லையாகவே வாழ்ந்தவர் சித்ரா. இவருக்காகவே சீரியல் பார்ப்பவர்கள் ஏராளம். இந்நிலையில் நேற்று நள்ளிரவு சூட்டிங் முடித்து விட்டு சென்னை நசரத்பேட்டையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் தங்கிய அவர் அதிகாலை 3.30 மணி அளவில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக வருங்கால கணவர் ஹேமந்த் வாக்குமூலம் அளித்துள்ளார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இருப்பினும் அவரது முகத்தில் நகக்கீறல்கள் இருப்பதால் காவல்துறையினர் தீவிர விசாரணையில் இறங்கி உள்ளனர். மேலும் அவருக்கும் ஹேமந்துக்கும் கடந்த 2 மாதங்களுக்கு முன்னரே பதிவு திருமணம் நடைபெற்று விட்டதால் வட்டாச்சியர் இந்த வழக்கை விசாரிக்க உள்ளார். இந்த வழக்கில் பல்வேறு சந்தேகங்கள் அடுக்கடுக்காக பொதுமக்கள் எழுப்பி வருகின்றனர். அது அனைத்திற்கும் இன்று நடைபெறும் உடற்கூறாய்வு முடிவில் விடை கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

chithra and her future husband

சித்ரா திரைத்துறையில் இருப்பது ஹேமந்த் மற்றும் அவரது குடும்பத்திற்கு பிடிக்கவில்லை என்பதால் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் தனித்தனி ஹோட்டல் அறைகளில் தங்கியதாக கூறப்படுகிறது. இதனால் ஹேமந்த், ஹோட்டல் ஊழியர்கள் உட்பட பலரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அவரது மரணத்திற்கு குடும்ப பிரச்சனை காரணமா? அல்லது படப்பிடிப்புகளால் ஏற்பட்ட மன அழுத்தமா? என்பது விசாரணை முடிவில் தெரியவரும்.

இதனால் அவருடன் நடிக்கும் சக நடிகர்களுடன் போலீசார் இன்று விசாரணை நடத்த உள்ளனர். மேலும் அவருக்கு நெருக்கமானவர்கள், உறவினர்களிடமும் விசாரணை நடைபெற உள்ளது. இருவருக்கும் திருமணம் முடிந்து இன்னும் 7 ஆண்டுகள் நிறைவடையாத காரணத்தால் வழக்கினை கோட்டாச்சியார் விசாரிக்க உள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here