சீரியல் நடிகை சித்ரா பிரதே பரிசோதனை முடிந்தது – உடல் குடும்பத்தினரிடம் ஒப்படைப்பு!!

1

சின்னத்திரை பிரபலம் விஜே சித்ரா தற்கொலை தொடர்பாக கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை 1.30 மணிநேரம் நடைபெற்று முடிந்துள்ளது. இதனையொட்டி உடல் அவரது அண்ணனிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது.

சின்னத்திரை பிரபலம் தற்கொலை:

முதலில் விஜேவாக அறிமுகமாகி பின் சின்னத்திரையில் பல சீரியல்களில் நடித்து தற்போது முல்லை என்ற பெயரில் கொடிகட்டி பறந்து கொண்டிருக்கும் நடிகை சித்ரா. ன்று அதிகாலை சென்னையில் உள்ள பிரபல ஸ்டார் ஹோட்டலில் தூக்குமாட்டி தற்கொலை செய்துகொண்டார். இவருடன் அவருடைய நிச்சயம் செய்யப்பட்ட மாப்பிளை ஹேமந்த் என்பவரும் இருந்துள்ளார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இதுகுறித்து வழக்கு பதிவு செய்து போலீஸார் விசாரணை நடத்திவருகின்றனர். முதற்கட்டமாக ஹேமந்த் என்பவரை விசாரித்ததில் பல தகவல்கள் வெளியாகியுள்ளது. ஏற்கனவே 2 மாதங்களுக்கு முன் இருவருக்கும் திருமணம் நடைபெற்றதாக அவர் கூறினார். தற்போது அவருடைய குடும்பத்தினருக்கும் சித்ராவிற்கும் இடையே மோதல்கள் இருந்ததாகவும் அதனால் அவர் நட்சத்திர ஹோட்டலில் தங்கி இருந்ததாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

‘வழக்கத்துக்கு மாறா அவ போன் பேசிட்டே இருந்தா’ – சித்ராவை பற்றி மனம் திறக்கும் சரண்யா!!

chithra
chithra

இது குறித்து சீத்ராவின் தாயார் என் மகள் தற்கொலை செய்யும் அளவு கோழை இல்லை. அவளை யாரோ கொலை செய்துள்ளதாக கண்ணீர் மல்க தெரிவித்தார். சித்ராவின் தோழிகளும் சித்ராவின் காதலர் பற்றி புகார் தெரிவித்துள்ளனர். எனவே அனைத்து சந்தேகங்களும் ஹேமந்த் பக்கம் திரும்பியுள்ளது.

இந்நிலையில், கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் இன்று காலை 11.30 மணிக்கு உடல்கூறாய்வு தொடங்கியது. அதன் முடிவுகள் வெளியான பிறகு, சித்ரா கொலை செய்யப்பட்டாரா? தற்கொலை செய்தாரா என்பது உறுதியாக தெரியவரும்.

தற்கொலை, கொலை அல்லது தற்கொலை செய்ய தூண்டப்பட்டது என்ற மூன்று கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதுதொடர்பாக அவரது செல்போன் மற்றும் சொகுசு கார் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சித்ரா உடல் கண்டெடுக்கப்பட்ட அறையில் இருந்து கடிதம் எதுவும் கைப்பற்றப்படவில்லை என்று கூறப்படுகிறது.

1 COMMENT

  1. Please ? give respect to each and every human being. In every human knows this is not a suicide is completely murder please ? take severe action ????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here