‘நிஷாக்கா சரியா கோர்த்து விடுறாங்க’ – நிஷாவை சண்டைக்கு இழுக்கும் அனிதா!!

0

பிக் பாஸ் நிகழ்ச்சியில் தற்போது ரோபோ டாஸ்கை கொடுத்து பல சண்டைகள் ஏற்பட்டு வருகின்றனர். அர்ச்சனா குரூப் உள்ளேயே பல சண்டைகள் ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில் தற்போது இன்றைய எபிசோடில் அனிதா மற்றும் நிஷா இடையே பெரிய சண்டை ஏற்படுகிறது.

பிக் பாஸ்

பிக் பாஸ் நிகழ்ச்சியில் ரோபோ டாஸ்கில் அர்ச்சனா மற்றும் ஹவுஸ் மேட்ஸ் இடையே பல சண்டைகள் ஏற்பட்டது. நிஷா அர்ச்சனாவை அழ வைக்கிறேன் என்று கூறி அவரின் அப்பா இறப்பை பற்றி பேசியது பலரையும் சங்கடத்தில் ஆழ்த்தியது. ஆனாலும் அர்ச்சனா எதாவது ஒன்று என்றால் ஓவர் ஆக்ஷன் செய்கிறார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இதுவே பலரையும் எரிச்சலடைய செய்கிறது. மேலும் நேற்று நிஷா ரோபோவாக இருந்ததை அடுத்து அர்ச்சனா அவரை வச்சு செய்தார் என்றே சொல்லலாம். மேலும் இந்த டாஸ்கின் மூலம் அர்ச்சனா ரியோ, நிஷா இடையே விரிசலும் ஏற்பட்டுள்ளது. இதனால் ரசிகர்களும் இப்போதாவது ஒழுங்கா விளையாடுங்க என்றும் கூறி வந்தனர்.

ஆனால் மறுபடியும் இருவரும் சேர்ந்ததாக தான் உள்ளது. இந்நிலையில் தற்போது ப்ரோமோ ஒன்று வெளியாகியுள்ளது. அதில் இந்த வாரத்திற்கான டாஸ்கில் யார் சுவாரசியம் குறைவாக இருந்தது என்று தேர்வு செய்யும் ப்ரோமோ வெளியாகியுள்ளது.

அனைவரும் ஆரி மற்றும் அனிதாவையே சொல்கின்றனர். ஆரி விளையாடிய விதம் மிகவும் போர் அடித்ததாகவும் கூறியுள்ளனர். அனிதாவும் நன்றக விளையாடாத மாதிரி இருந்ததாக கூறுள்ளனர். மேலும் இந்த ப்ரோமோ அமைதியாக இருந்தாலும் அடுத்த ப்ரோமோவில் சண்டை வெடித்துள்ளது.

அதாவது அனிதா நிஷா சுவாரசியம் குறைவாக செய்ததாக சொல்கிறார். மேலும் இந்த டாஸ்கில் தன்னை கோர்த்து விட்டதாகவும் சொல்கிறார். இதனால் கோவமடையும் நிஷா அனிதாவிடம் சண்டையிடுகிறார். இந்த சண்டை எதற்கு என்றால் ரோபோவிற்கு பட்டப்பெயர் வைத்த போது அனிதாவையே அதை சொல்ல சொன்னார் நிஷா.

இதற்கு தான் அனிதா நிஷா தன்னை கோர்த்து விடுகிறார் என்று கூறியுள்ளார். இதனால் நிஷாவும் சண்டையிடுகிறார். இத்தனை நாள் ஒளிந்து இருந்து நிஷா இன்று தான் வெளிப்பட்டுள்ளார். மேலும் நிஷா இந்த போட்டிக்கு லாயக்கு இல்லை என்பது போல கமன்ட் செய்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here