விஷாலுடன் கை கோர்த்த இயக்குனர் செல்வராகவன்….,மாஸாக வெளியான போஸ்டர்…,

0
விஷாலுடன் கை கோர்த்த இயக்குனர் செல்வராகவன்....,மாஸாக வெளியான போஸ்டர்...,
விஷாலுடன் கை கோர்த்த இயக்குனர் செல்வராகவன்....,மாஸாக வெளியான போஸ்டர்...,

நடிகர் விஷால் நடித்து வரும் ‘மார்க் ஆண்டனி’ திரைப்படத்தில் இணைந்துள்ள இயக்குனர் செல்வராகவனை வரவேற்று போஸ்டர் ஒன்றை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

போஸ்டர் ரிலீஸ்

தமிழ் சினிமாவில் குறிப்பிடத்தக்க இயக்குனர்களில் ஒருவர் செல்வராகவன். ஆயிரத்தில் ஒருவன், புதுப்பேட்டை போன்ற சூப்பர் ஹிட் திரைப்படங்களை கொடுத்த இயக்குனர் செல்வராகவன் தற்போது நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில், செல்வராகவனின் நடிப்பில் வெளியான சாணி காகிதம், பீஸ்ட் போன்ற திரைப்படங்கள் மக்கள் மத்தியில் வரவேற்புகளை பெற்றது.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இதையடுத்து, இயக்குனர் செல்வராகவன் மீண்டும் ஒரு புதிய படத்தில் நடிப்பதற்கு கமிட் ஆகி இருக்கிறார். அதாவது, நடிகர் விஷால் நடித்து வரும் ‘மார்க் ஆண்டனி’ என்ற திரைப்படத்தில் சிரஞ்சீவி என்ற கதாப்பாத்திரத்தில் நடிக்க இருக்கிறார் செல்வராகவன். அந்த வகையில், இன்று செல்வராகவனின் பிறந்த நாளை முன்னிட்டு ‘மார்க் ஆண்டனி’ படத்தில் சிரஞ்சீவி கதாப்பாத்திரத்தின் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.

தல தோனியை மிஸ் செய்யும் சின்ன தல ரெய்னா….,நெகிழ்ச்சியில் ரசிகர்கள்…,

இந்த புகைப்படம் ரசிகர்களின் கவனம் பெற்று வருகிறது. 1970களில் நடைபெறுவது போல அமைக்கப்பட்டுள்ள இந்த கதையில் நடிகர் விஷால், செல்வராகவன், நடிகை ரிது வர்மா, ஓய்.ஜி.மகேந்திரன், ரெடின் கிங்ஸ்லி, அபிநயா ஆகியோர் நடித்து வருகின்றனர். ஜி.வி.பிரகாஷ் குமார் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். ஆதிக் ரவிச்சந்திரன் என்பவர் இந்த படத்தை இயக்குகிறார் என்பது கூடுதல் தகவல்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here