‘விராட் கோலியை போல சாதிக்க வேண்டும்’….,RCB பெண்கள் அணியின் கேப்டன் மந்தனா கருத்து!!

0
'விராட் கோலியை போல சாதிக்க வேண்டும்'....,RCB பெண்கள் அணியின் கேப்டன் மந்தனா கருத்து!!
'விராட் கோலியை போல சாதிக்க வேண்டும்'....,RCB பெண்கள் அணியின் கேப்டன் மந்தனா கருத்து!!

RCB அணியின் வீரர் விராட் கோலி போல WPL போட்டிகளில் சாதனை படைக்க வேண்டும் என பெண்களுக்கான RCB அணியின் கேப்டன் மந்தனா கருத்து கூறியுள்ளார்.

கேப்டன் மந்தனா

இந்தியாவில் ஆண்களுக்காக நடத்தப்பட்டு வரும் இந்தியன் ப்ரீமியர் லீக் (IPL) போட்டிகள் சுமார் 15 ஆண்டுகளை வெற்றிகரமாக கடந்துள்ளது. அந்த வகையில், இந்த ஆண்டுக்கான 16 ஆவது சீசன் IPL போட்டிகள் வரும் மார்ச் 31 ஆம் தேதியன்று துவங்க உள்ளது. இதற்கிடையில், பெண்களுக்கான பிரீமியர் லீக் போட்டிகளை இந்த ஆண்டு முதல் நடத்துவதற்கு இந்திய கிரிக்கெட் வாரியம் முடிவு செய்துள்ளது.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

அதன்படி, சுமார் 5 அணிகளுக்கு இடையேயான WPL 2023 (சீசன் 1) போட்டிகள் மார்ச் 4 ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. அந்த வகையில், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் என பெயரிடப்பட்டுள்ள RCB அணியை கிரிக்கெட் வீராங்கனை ஸ்மிருதி மந்தனா வழிநடத்தி செல்கிறார்.

தல தோனியை மிஸ் செய்யும் சின்ன தல ரெய்னா….,நெகிழ்ச்சியில் ரசிகர்கள்…,

அந்த வகையில் RCB மகளிர் அணியின் கேப்டன் ஸ்மிருதி மந்தனா, RCB ஆண்கள் அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி குறித்த சில கருத்துக்களை பகிர்ந்துள்ளார். அதாவது, ‘RCB அணியை வைத்து என்னையும், விராட் கோலியையும் ஒப்பிடுவது எனக்கு பிடிக்கவில்லை. கோலி பல சாதனைகளை செய்துள்ளார். நானும் அப்படி செய்ய வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். அதற்கு நீண்ட காலம் பிடிக்கும்’ என குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here