தல தோனியை மிஸ் செய்யும் சின்ன தல ரெய்னா….,நெகிழ்ச்சியில் ரசிகர்கள்…,

0
தல தோனியை மிஸ் செய்யும் சின்ன தல ரெய்னா....,நெகிழ்ச்சியில் ரசிகர்கள்...,
தல தோனியை மிஸ் செய்யும் சின்ன தல ரெய்னா....,நெகிழ்ச்சியில் ரசிகர்கள்...,

IPL போட்டிகளில் சென்னை அணிக்காக இணைந்து விளையாடும் தோனி மற்றும் ஜடேஜாவை மிஸ் செய்வதாக முன்னாள் வீரர் ரெய்னா கூறியுள்ளார்.

ரெய்னா நெகிழ்ச்சி

இந்தியாவில் நடத்தப்படும் உள்நாட்டு கிரிக்கெட் போட்டிகளில் பிரபலமான ஒன்று இந்தியன் ப்ரீமியர் லீக் (IPL). இதுவரை 15 ஆண்டுகளாக நடத்தப்பட்டு வரும் IPL போட்டிகள் இந்த முறை 16 ஆவது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. இந்த IPL போட்டிகளில் அதிக பலம் வாய்ந்த அணிகளில் ஒன்றாக கருதப்படுவது தமிழகத்தை சார்ந்த சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணி.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

இந்த அணியில் எம்.எஸ்.தோனி, மொயீன் அலி, ஜடேஜா, ராயுடு, சஹார் போன்ற திறமை மிக்க மூத்த வீரர்கள் உள்ளனர். அதனால், CSK அணி மற்ற அணிகளுக்கு ஒரு சிம்ம சொப்பனமாக விளங்குகிறது. அந்த வகையில், IPL போட்டிகளில் சென்னை அணிக்காக விளையாடி வந்த முக்கியமான வீரர்களில் ஒருவர் சுரேஷ் ரெய்னா கடந்த ஆண்டில் அணியில் இருந்து ஓரங்கட்டப்பட்டார். இருப்பினும், IPL போட்டிகளின் வர்ணனையில் ஈடுபட்டு வந்த ரெய்னாவுக்கு IPL போட்டிகளில் விளையாட வேண்டும் என்ற ஆர்வம் குறையவில்லை.

”செம்பி’யின் அடுத்த பாகம் தான் ‘அயோத்தி” திரைப்படம்…,நடிகர் அஸ்வின் விமர்சனம்!!

அந்த வகையில், கடந்த பல ஆண்டுகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக தோனி மற்றும் ஜடேஜாவுடன் இணைந்து விளையாடியதை மிஸ் செய்வதாக முன்னாள் நட்சத்திர கிரிக்கெட் வீரர் ரெய்னா தெரிவித்துள்ளார். இந்த ஆண்டு IPL போட்டிகளில் கலந்து கொள்ளும் தோனி தலைமையிலான CSK அணி சென்னையில் தற்போது பயிற்சி விளையாட்டில் ஈடுபட்டு வருகிறது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here