”செம்பி’யின் அடுத்த பாகம் தான் ‘அயோத்தி” திரைப்படம்…,நடிகர் அஸ்வின் விமர்சனம்!!

0
''செம்பி'யின் அடுத்த பாகம் தான் 'அயோத்தி'' திரைப்படம்...,நடிகர் அஸ்வின் விமர்சனம்!!
''செம்பி'யின் அடுத்த பாகம் தான் 'அயோத்தி'' திரைப்படம்...,நடிகர் அஸ்வின் விமர்சனம்!!

நடிகர் சசிகுமார் நடித்துள்ள ‘அயோத்தி’ திரைப்படம், ‘செம்பி’ திரைப்படத்தின் அடுத்த பாகம் போல இருக்கிறது என நடிகர் அஸ்வின் கருத்து தெரிவித்துள்ளார்.

அயோத்தி விமர்சனம்

தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடிக்கும் சிலரில் நடிகர் சசிகுமாரும் ஒருவர். பெரிய அளவுக்கு அலட்டல், ஆடம்பரம், பேண்டஸி என்று இல்லாமல் குடும்பப்பாங்கான கதைகளை தேடி நடிக்கும் நடிகர் சசிகுமாருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர். அந்த வகையில், நடிகர் சசிகுமார் நடிப்பில் தற்போது வெளியாகி இருக்கும் ஒரு திரைப்படம் ‘அயோத்தி’.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

பெண்கள் மீதான அடக்குமுறை, மனிதம் மற்றும் மதநல்லிணக்கத்தை கருவாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இந்த திரைப்படத்தில் நடிகர் சசிகுமாருடன் இணைந்து நடிகை ப்ரீத்தி அஸ்வதி, யஷ்பால் ஷர்மா, விஜய் டிவி புகழ் என பலர் நடித்துள்ளனர். இந்த படத்தை மந்திர குமார் இயக்க, பிரபல எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் கதை எழுதியுள்ளார். என்.ஆர்.ரகுநந்தன் இசையமைத்துள்ளார். இந்த திரைப்படம் குறித்து பல பாசிட்டிவ் கமெண்டுகள் மக்கள் மத்தியில் இருந்து கிடைத்துள்ளது.

உங்களால தான் இந்த நிலைமை.., ஏன் அப்பா வீட்டுக்கு போறேன்.., தனத்துடன் மல்லுக்கட்டும் மீனா.., சூடுபிடிக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ்!!!!

அந்த வகையில், நடிகர் அஸ்வின் குமாரும் ‘அயோத்தி’ திரைப்படம் குறித்த தனது கருத்துக்களை வெளிப்படுத்தியுள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், ‘செம்பி திரைப்படத்திற்கும் அயோத்தி திரைப்படத்திற்கும் நிறைய சம்பந்தம் இருக்கிறது. நான் அயோத்தி திரைப்படத்தை செம்பியின் அடுத்த பாகமாக பார்க்கிறேன்’ என்று உணர்வுப்பூர்வமாக குறிப்பிட்டுள்ளார் நடிகர் அஸ்வின்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here