ஜூனியர் என்.டி.ஆர் உடன் கை கோர்க்கும் ஜான்வி கபூர்?…..,நாளை முக்கிய அப்டேட்….,

0
ஜூனியர் என்.டி.ஆர் உடன் கை கோர்க்கும் ஜான்வி கபூர்?.....,நாளை முக்கிய அப்டேட்....,
ஜூனியர் என்.டி.ஆர் உடன் கை கோர்க்கும் ஜான்வி கபூர்?.....,நாளை முக்கிய அப்டேட்....,

நடிகர் ஜூனியர் என்.டி.ஆர் மற்றும் நடிகை ஜான்வி கபூர் நடிக்க இருக்கும் புதிய திரைப்படத்திற்கான அப்டேட் நாளை வெளியாக இருக்கிறது.

திரைப்பட அப்டேட்

தெலுங்கு திரைப்பட உலகின் முன்னணி நடிகர்களில் ஒருவர் ஜூனியர் என்.டி.ஆர். இவரது நடிப்பில் வெளியான ‘RRR’ திரைப்படம் பல்வேறு இந்திய மொழிகளில் திரையிடப்பட்டு இவருக்கு பான் இந்தியா நடிகர் என்ற அந்தஸ்தை பெற்றுத் தந்துள்ளது. இதனால், ஜூனியர் என்.டி.ஆரின் மார்க்கெட்டும் சற்று உயர்ந்துள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

அந்த வகையில் ஜூனியர் என்.டி.ஆர் நடிக்கும் புதிய திரைப்படத்தை பிரபல தெலுங்கு இயங்குனர் கொரட்டலா சிவா இயக்க இருக்கிறார். இவரும், தெலுங்கு சினிமாவில் நடிகர் பிரபாஸ், மகேஷ் பாபு ஆகியவர்களை வைத்து பல வெற்றிப்படங்களை கொடுத்தவர். இந்த இரண்டு முக்கிய புள்ளிகளும் இணையும் திரைப்படம் மீதான எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் இப்போதே எழுந்துள்ளது.

‘விராட் கோலியை போல சாதிக்க வேண்டும்’….,RCB பெண்கள் அணியின் கேப்டன் மந்தனா கருத்து!!

இந்த நிலையில், நடிகர் ஜூனியர் என்.டி.ஆர் நடிக்க இருக்கும் 30 ஆவது திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக பிரபல பாலிவுட் நடிகை ஜான்வி கபூர் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும், இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு நடிகை ஜான்வி கபூரின் பிறந்தநாளை முன்னிட்டு நாளை மார்ச் 6 ஆம் தேதி வெளியாக இருப்பதாக சொல்லப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here