பொதுமக்கள் கொரோனா தடுப்பூசிக்கு முன்பதிவு செய்துகொள்ளலாம் – மத்திய சுகாதாரத்துறை அறிவிப்பு!!

0

இந்தியாவில் கொரோனா தடுப்பூசி இரண்டாம் கட்டமாக பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வர உள்ளது. கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்வதற்கு வசதியாக, முன்பதிவு ஏற்பாடுகளை மத்திய சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது.

கொரோனா தடுப்பூசி

இந்தியாவில் கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் ஆகிய கொரோனா தடுப்பூசிகள் பயன்பாட்டில் உள்ளன. கடந்த ஜனவரி மாதம் நாடு முழுவதும் முதற்கட்ட கொரோனா தடுப்பூசி போடப்பட்டது. கொரோனா முன்களப்பணியாளர்களான சுமார் 8 கோடி பேருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் பொதுமக்களுக்கு இரண்டாம் கட்ட தடுப்பூசி போடும் பணிகள் ஆரம்பமாகவுள்ளது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இன்று மார்ச் 1 முதல் கொரோனா தடுப்பூசி போடுவதில் இரண்டாம் கட்டம் துவங்கவுள்ளது. இந்த திட்டத்தின் மூலம் சுமார் 27 கோடி பேருக்கு தடுப்பூசி போடப்படவுள்ளது. தடுப்பூசி போடும் பணியில் தனியார் மருத்துவமனைகளும் இணைக்கப்பட்டுள்ளன. தனியார் மருத்துவமனையில் ஒரு தடுப்பூசிக்கு 250 ரூபாய் வசூலிக்கப்படும் என மத்திய அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த தடுப்பூசி போடுவதற்கு வசதியாக முன்பதிவு செய்துகொள்ளும் முறையை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.

சின்னத்திரை நடிகைகள் டாப் 5 லிஸ்ட் – முதலிடத்தை பிடித்த பாரதி கண்ணம்மா ரோஷினி!!

அதன்படி செயலி மூலமாகவும், அரசு மருத்துவமனைகள் மற்றும் பொதுச்சேவை மையங்களிலும் முன் பதிவு செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மக்கள் சுயமாக முன் பதிவு செய்வதற்காக மத்திய அரசின் கோ-வின் மற்றும் ஆரோக்கிய சேது ஆகிய செயலிகளை பயன்படுத்தலாம் எனவும் கூறப்பட்டுள்ளது. ஒரு குடும்பத்தில் அதிகபட்சம் நான்கு உறுப்பினர்கள் வரை இதில் பதிவு செய்து கொள்ளலாம். இதற்கான வசதி காலை 9 மணி முதல் ஆரம்பமாகும். பதிவு செய்தவுடன் அதனை உறுதிப்படுத்திக்கொள்வதற்காக ஓடிபி அனுப்பப்படும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here