பிக்பாஸ் சீசன் 5ன் கலந்துகொள்ள போகும் பிரபலங்கள் – இணையத்தில் வைரலாகும் லிஸ்ட்!!

0

பிக்பாஸ் சீசன் 4 தற்போது முடியவடைந்துள்ள நிலையில் சீசன் 5 துவங்குவதற்கான பணிகள் நடைபெற்றுவருகின்றன. இந்நிலையில் இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ளப்போகும் போட்டியாளர்களின் பெயர் பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது.

பிக்பாஸ் சீசன் 5:

விஜய் டிவியின் சூப்பர் ஹிட் ஷோவான பிக்பாஸ் சீசன் 4 கடந்த ஜனவரி மாதம் நிறைவடைந்தது. அப்போது முதலே அடுத்த சீசன் எப்போது என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வந்தனர். நடிகர் கமலஹாசன் தொகுத்து வழங்கி வரும் இந்த நிகழ்ச்சியின் அடுத்த சீசன் மற்ற சீசன்களை போல் இல்லாமல் மிகவும் வேடிக்கை மற்றும் நகைச்சுவை கலந்ததாக இருக்க வேண்டுமென முடிவு செய்துள்ள பிக்பாஸ் குழுவினர் தற்போது 5வது சீசனுக்கான ஆரம்ப கட்ட பணிகளை துவங்கியுள்ளனர்.

தளபதி 65ல் விஜய்யுடன் இணையும் சிவகார்த்திகேயன் – கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!!

இந்நிலையில் தற்போது பிக்பாஸ் சீசன் 5ல் கலந்து கொள்ளவிருக்கும் போட்டியாளர்கள் என சில பிரபலங்களின் பெயர்கள் பட்டியலில் இடம் பிடித்துள்ளன. நடிகைகள் லட்சுமி ராமகிருஷ்ணா, சோனா, ஸ்ரீரெட்டி, குக் வித் கோமாளி பிரபலங்களான பவித்திரா, அஸ்வின், தர்ஷா குப்தா, நடிகர்கள் ராதாரவி, அசிம் ஆகியோர் இந்த சீசனில் கலந்து கொள்ளவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இன்னும் பிக்பாஸ் குழுவினர் அதிகாரபூர்வமாக அறிவிக்காத நிலையில் இணையத்தில் வெளியாகியுள்ள இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ள பிரபலங்களின் ரசிகர்கள் தற்போது கொண்டாட்டத்தில் உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here