தளபதி 65ல் விஜய்யுடன் இணையும் சிவகார்த்திகேயன் – கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!!

0

நடிகர் விஜய்யின் அடுத்த படமான தளபதி 65ல் விஜய்யுடன் நடிகர் சிவகார்த்திகேயன் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் விஜய் மற்றும் சிவகார்த்திகேயனின் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் உள்ளனர்.

தளபதி 65:

நடிகர் விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் படம் வசூலில் சக்கை போடு போடுவதை தொடர்ந்து தற்போது தளபதி 65 படத்தின் பணிகள் துவங்கவிருக்கின்றன. இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் உருவாக உள்ள இந்த படத்திற்கு இப்போதிருந்தே ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு கூடியுள்ளது. மாஸ்டர் படத்தில் விஜய் சேதுபதியுடன் இணைந்து நடித்திருந்தார் விஜய். அந்த படம் விஜய் மற்றும் விஜய் சேதுபதியின் ரசிகர்களுக்கு பெரும் விருந்தாகவே அமைந்தது.

‘ஏ.எல்.விஜயை விட்டு பிரிந்ததும் பயத்துடன் தான் வாழ்ந்தேன்’ – மனம் திறக்கும் அமலா பால்!!

இந்நிலையில் தற்போது தளபதி 65 படத்தில் விஜய்யுடன் சிவகார்த்திகேயன் இணையவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சிவகார்த்திகேயன் நடிப்பு, தயாரிப்பு ஆகிய பணிகளுடன் பாடத்திற்கான பாடல்களையும் எழுதி வருகிறார். கோலமாவு கோகிலா படத்தில் அவர் எழுதிய “கல்யாண வயசு” பாடல் பெரிய ஹிட் அடித்தது. அதை தொடர்ந்து மேலும் சில பாடல்களை எழுதிய சிவகார்த்திகேயன் தற்போது அவர் நடித்து வரும் டாக்டர் படத்தில் “செல்லம்மா” மற்றும் “சோ பேபி” ஆகிய பாடல்களையும் எழுதியிருக்கிறார். அனிருத் இசையில் வெளியாகியுள்ள இந்த பாடல்கள் தற்போது இணையத்தை கலக்கி வருகின்றன.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

ஏற்கனவே நெல்சனும் சிவகார்திகேயனும் இணைந்து கோலமாவு கோகிலா படத்தில் பணியாற்றியுள்ள நிலையில் இப்போது இவர்கள் இருவரும் மீண்டும் தளபதி 65 க்காக விஜய்யுடன் இணையவிருக்கின்றனர்.அதாவது அந்த படத்தின் பாடல்களை எழுத சிவகார்திகேயனிடம் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டு அவரும் ஓ.கே. சொல்லியுள்ளாராம். இது குறித்த அதிகாரபூர்வமான அறிவிப்பு இன்னும் சில தினங்களில் வெளியிடப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. தளபதி விஜய்யுடன் சிவகார்த்திகேயன் இணையவிருக்கும் செய்தி இருவரது ரசிகர்களிடையேயும் கொண்டாட்டத்தினை ஏற்படுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here