தமிழ் மொழியின் மீது ஆர்வம் காட்டும் மோடி, அமித்சா மற்றும் ராகுல் காந்தி – வைரலாகும் #Tamil ஹாஸ்டேக்!!

0

அடுத்த மாதம் நடைபெறவுள்ள தேர்தலை ஒட்டி இந்திய பிரதமர் மோடி, மத்திய உள்துறை மந்திரி அமித்சா மற்றும் ராகுல் காந்தி ஆகியோர் தமிழகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகினர். தமிழ் மொழியின் பண்பாடுகள் குறித்து இவர்கள் கூறிய கருத்துக்கள் வலைதளத்தில் தற்போது ட்ரெண்ட் ஆகி வருகிறது.

தலைவர்களின் தமிழ் ஆர்வம்

சட்டசபை தேர்தலை ஒட்டி பிரதமர் மோடி, சென்ற மாதத்தில் மட்டுமே இருமுறை தமிழகத்திற்கு சுற்று பயணம் மேற்கொண்டார். மேலும் மத்திய உள்துறை மந்திரி அமித்சா அவர்களும் தமிழகத்தில் நடைபெறும் தேர்தல் கூட்டங்களில் பங்குபெற்று வருகிறார். தேர்தல் கூட்டங்களில் பிரதமர் மோடி பேசியபோது, ‘உலகின் மிக பழமையான மொழியை கற்காமல் விட்டுவிட்டோம் என நினைக்கையில் மிகுந்த வருத்தமளிக்கிறது. தமிழ் இலக்கியத்தின் மேன்மை, ஆழம் குறித்து அநேகர் என்னிடம் சிலாகித்து பேசியுள்ளார்கள்’ என கூறினார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

தொடர்ந்து மத்திய மந்திரி அமித்சா கூறுகையில், ‘உலகின் உன்னதமான மொழியான தமிழை நான் பேசமுடியாமல் போனது வருத்தமளிக்கிறது’ என கூறியுள்ளார். இவர்களை போன்று காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தெரிவிக்கையில், திருக்குறளை படித்து வருவதாகவும், அதில் சொல்லப்பட்டுள்ள விஷயங்களை எல்லாம் அவரை வியப்பில் ஆழ்த்தியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் தமிழகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் ராகுல் காந்தி, அடிக்கடி தமிழ் மொழியில் பேசி, உரையாடி அசத்தி வருகிறார்.

ராஜா ராணி 2 – சந்தியாவிற்காக 3 மாதம் டைம் கொடுக்கும் சிவகாமி! அர்ச்சனாவின் சதி தெரியவருமா??

இப்படி பல தேசிய தலைவர்கள் தமிழைப்பற்றி பேசிய விஷயங்கள் எல்லாம் தற்போது ட்விட்டரில் ட்ரெண்டாகி வருகிறது. இவர்களின் தமிழ் ஆர்வம் எல்லாம் தேர்தலுக்காக தான் என வலைதளங்களில் பொதுவான கருத்துக்கள் எழுந்துள்ளது. அரசியல் லாபத்திற்காக பேசினாலும் தமிழ் மொழியின் அருமை பற்றி இப்போதாவது புரிகிறதே என வலைதளத்தில் பலர் கருத்துக்களை பரிமாறி வருகின்றனர். இந்த கருத்துக்கள் எல்லாம் #Tamil என்ற பெயரில் ட்விட்டரில் ட்ரெண்டாகி வருவது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here