புதிய கட்சி ஆரம்பிக்கும் விருப்பம் எனக்கு இல்லை – முன்னாள் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கருத்து!!

0

அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டிரம்ப் ” புதிய கட்சி தொடங்கும் விருப்பம் இல்லை” எனவும், “தற்போதைய அதிபர் ஜோ பைடனின் நிர்வாகம் மிக மோசமாக இருக்கிறது” எனவும் தெரிவித்துள்ளார்.

முன்னாள் அதிபர் டிரம்ப்:

அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டிரம்ப் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற அதிபருக்கான தேர்தலில் இரண்டாவது முறையாக அதிபராக வேண்டி தனது குடியரசு கட்சியின் சார்பில் போட்டியிட்டார். இந்த தேர்தலில் ஜனநாயக கட்சியின் வேட்பாளரான ஜோ பைடனிடம் தோற்று பதவியை இழந்தார். இருந்த போதிலும் கூட தனது தோல்வியை ஒப்புக்கொள்ளாத டிரம்ப் பதவி விலகாமல் அடம் பிடித்தார். அதன்பிறகு இந்த பிரச்சினையில் தலையிட்ட அமெரிக்க நாடளுமன்றம் ஜோ பைடனின் வெற்றியை உறுதி செய்து ட்ரம்பை பதவி விலக வலியுறுத்தியது.

தமிழ் மொழியின் மீது ஆர்வம் காட்டும் மோடி, அமித்சா மற்றும் ராகுல் காந்தி – வைரலாகும் #Tamil ஹாஸ்டேக்!!

இதை தொடர்ந்து பதவி விலகிய டிரம்ப் தற்போது முதன் முறையாக பொது மேடையில் பேசினார். அவர் அப்போது ” 2024 தேர்தலில் மீண்டும் நான் போட்டியிடுவேன். பைடனின் நிர்வாகம் மிகவும் மோசமாக இருக்கபோவது நமக்கு தெரியும். ஆனால் எந்த அளவுக்கு என்பதை கற்பனை கூட செய்ய முடியவில்லை. 2024 அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி படு தோல்வியை சந்திக்கும். புதிய கட்சியை தொடங்குவதில் எனக்கு விருப்பம் இல்லை. நாம் துவங்கிய இந்த சிறப்பான பயணம் முடிவுக்கு வரும் நாள் அருகில் இல்லை” என்று கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here