அக். 5 முதல் பள்ளிகள் திறப்பு, வருகைப் பதிவேடு கிடையாது – மாநில அரசு அறிவிப்பு!!

0

நாடு முழுவதும் அக்டோபர் 31 வரை நீட்டிக்கப்பட்ட ஊரடங்கில் அக்டோபர் 15ம் தேதிக்கு பிறகு பள்ளி, கல்லூரிகள் திறப்பது குறித்து அந்தந்த மாநில அரசுகள் முடிவு செய்து கொள்ள மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ளது. இந்நிலையில் அக்டோபர் 5 முதல் பள்ளிகள் திறக்கப்பட உள்ளதாக புதுவை மாநில அரசு ஏற்கனவே அறிவித்து இருந்தது. தற்போது அது தொடர்பாக சில அறிவிப்புகள் வெளியிடப்பட்டு உள்ளன.

பள்ளிகள் திறப்பு:

கொரோனா பரவல் காரணமாக மார்ச் மாதம் முதலே பள்ளிகள் மூடப்பட்டு உள்ளன. இதனால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டு விடக்கூடாது என்பதற்காக ஆன்லைன் வாயிலாக வகுப்புகள் எடுக்கப்பட்டு வருகின்றன. வழக்கம்போல கோடை விடுமுறை முடிந்து ஜூன் மாதம் திறக்கப்படும் பள்ளிகள் பல மாதங்கள் கடந்து விட்ட நிலையில் இன்னும் திறக்கப்படவில்லை. இதனால் மீண்டும் பள்ளிகள் திறக்கப்படும் போது மாணவர்களுக்கு பாட சுமைகள் அதிகமாக இருக்கும் என்பதால் பாடத்திட்டத்திட்டங்கள் குறைக்கப்பட்டு உள்ளன.

ENEWZ – சமூக வலைதள பக்கங்களில் சேர கிளிக் பண்ணுங்க!!

school – classes 

இந்நிலையில் அக்டோபர் 5ம் தேதி முதல் புதுவை மாநிலத்தில் பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. அது குறித்து வெளியிடப்பட்டு உள்ள அறிக்கையில்,

  • அக்.5 முதல் பள்ளிகள் திறக்கப்படும் போது வருகைப் பதிவேடுகள் கிடையாது என கல்வி இயக்குனர் அறிவித்துள்ளார்.
  • வருகைப் பதிவேடு இல்லை எனினும் மாணவர்கள் அவர்களின் பெற்றோர்கள் சம்மதத்துடன் பள்ளிக்கு வர வேண்டும்.
  • வரும் 5ம் தேதி முதல் 7ம் தேதி வரை மாணவர்களின் இருக்கை மற்றும் பள்ளிகள் தயார் செய்யப்படும்.
  • 8ம் தேதி முதல் மாணவர்களின் சந்தேகங்களை தீர்க்கும் வகுப்புகள் தினமும் 3 மணிநேரம் நடைபெறும்.
  • 9 முதல் 12ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு தலா 3 நாட்கள் காலை 10 மணிமுதல் பிற்பகல் 1 மணிவரை வகுப்புகள் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here