தமிழக்தில் பள்ளிகள் திறப்பு ஒத்திவைக்கப்படும் – தமிழக அரசு அறிவிப்பு!!

0
தமிழகத்தில் 24 மாதங்களுக்கு பின் மழலையர் பள்ளிகள் திறப்பு - கூடுதல் தளர்வுகள் இன்று முதல் அமல்!!
தமிழகத்தில் 24 மாதங்களுக்கு பின் மழலையர் பள்ளிகள் திறப்பு - கூடுதல் தளர்வுகள் இன்று முதல் அமல்!!

கொரோனா காரணமாக கடந்த 8 மாத காலமாக பள்ளிகள் மூடிவைக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவல் இன்னும் குறையாத காரணத்தினால் பள்ளிகள் திறப்பதை தள்ளி வைப்பது தொடர்பான தகவல் வெளியாகி உள்ளது.

பள்ளிகள் திறப்பு

கடந்த டிசம்பர் மாதத்தில் சீனாவிலிருந்து நாடெங்கும் கொரோனா பரவ தொடங்கியது. தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் கொரோனா தொடங்கிய காரணத்தினால் பள்ளிக் கல்லூரிகள் மூடப்பட்டன. பத்தாம் வகுப்பு மற்றும் மத்த வகுப்பிற்கும் பொதுத்தேர்வு ரத்துசெய்யப்பட்டது. பின்பு கல்லூரிகளுக்கும் செமஸ்டர் தேர்வு ரத்துசெய்யப்பட்டது. தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வு முடிந்து மறுநாள் மார்ச் 25ஆம் தேதி ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. படிப்படியாக பொது முடக்கம் அறிவித்த காரணத்தினால் பள்ளிகள் திறப்பதற்கான வாய்ப்பு கிடைக்கவில்லை.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இந்நிலையில் தமிழக அரசு நவம்பர் 16ஆம் தேதி அன்று 9 ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கும் என்று அறிவிப்பு வெளியானது. கொரோனா பரவல் குறையாத காரணத்தினால் பள்ளிகள் திறப்பதை தள்ளிவைக்கவேண்டும் என்று கல்வியாளர்கள் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இந்த கோரிக்கையை முன்னிட்டு கல்வி அமைச்சர் செங்கோட்டையன் மற்றும் கல்வித்துறை அதிகாரிகள் கடந்த திங்கள்கிழமை ஆய்வு கூட்டம் நடத்தினர்.

அங்கு கல்விதுறை அதிகாரிகள் பள்ளிகள் திறக்க தற்பொழுது ஏற்ற நேரம் இல்லை என்று கூறினார்கள். அதுமட்டும் இல்லாமல் வடகிழக்கு பருவமழை தோன்றினால் மீண்டும் நவம்பர் மற்றும் டிசம்பர் மாதம் பள்ளிக்கு விடுமுறை அறிவிக்கும் நிலை ஏற்படும். எனவே பள்ளிகள் திறப்பு தள்ளி வைக்க வேண்டும் என்று அறிவித்தார்கள். இந்த தகவல் தமிழக முதல்வர் அவர்களுக்கும் தெரிவிக்கப்பட்டது. இந்த கருத்தை கொண்டு பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறப்பது ஒத்திவைக்க செயல்பட்டுவருகிறது என்றும் இதை பற்றிய தகவல்கள் விரைவில் வெளியிடப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here