கொரோனா பரவல் எதிரொலி – ஏப்ரலுக்கு பிறகு பள்ளிகள் இயங்குமா?? பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் விளக்கம்!!

0

கொரோனா பரவல் அதிகரிப்பால் பள்ளிகள் வருகிற ஏப்ரல் 1ம் தேதி மூடப்படும் என்று தகவல் பரவிய நிலையில் தற்போது பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் கண்ணப்பன் அதற்கு விளக்கம் அளித்துள்ளார்.

பள்ளிக்கல்வித்துறை:

தமிழகத்தில் கடந்த ஆண்டு கொரோன வைரஸ் காரணமாக பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்பட்டது. பின்பு கொரோனா பரவல் சற்று குறைந்த நிலையில் இந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டது. அவர்களை தொடர்ந்து 11ம் வகுப்பிற்கு பள்ளிகள் துவங்கப்பட்டது. மேலும் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்கள் பொதுத்தேர்வுகளை சந்திக்க போவதால் அவர்களுக்கு சுமையை குறைக்கும் வகையில் பள்ளிக்கல்வித்துறை 10 மற்றும் 12ம் வகுப்பிற்கான பாடங்களை குறைந்தனர். இதனால் மாணவர்கள் சற்று நிம்மதி அடைந்தனர்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

பின்பு 10 மற்றும் 11ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடைபெறாது என்று தமிழக முதல்வர் அதிரடியாக அறிவித்தார். இதனால் 10ம் மற்றும் 11ம் வகுப்பு மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். ஆனால் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு கட்டாயமாக பொதுத்தேர்வு நடத்தப்படும் என்று அறிவித்தனர். மேலும் அவர்களுக்கு வருகிற மே மாதம் 3ம் தேதியுடன் பொதுத்தேர்வு துவங்குகிறது. அதுமட்டுமல்லாமல் அடுத்த மாதம் 16ம் தேதி முதல் அவர்களுக்கான செய்முறை தேர்வும் நடைபெறவுள்ளது.

பெட்ரோல் மற்றும் டீசல் விலை – இன்றைய நிலவரம்!!

இந்நிலையில் கடந்த சில நாட்களாக தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இதனால் பள்ளிகள் அனைத்தும் வருகிற ஏப்ரல் மாதம் 1ம் தேதியுடன் மூடப்படும் என்று தகவல் தொடர்ந்து வெளிவந்தது. தற்போது இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் கண்ணப்பன் விளக்கியுள்ளார். அதில் அவர் கூறியதாவது, ‘ஏப்ரல் மாதம் 1ம் தேதிக்கு பின்பும் பள்ளிகள் வழக்கம் போல் இயங்கும்’ என்று குழப்பத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here