#INDvsENG டி 20 தொடர் – இனி ரசிகர்களுக்கு நோ என்ட்ரி! பிசிசிஐ அதிரடி!!

0

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கான டி 20 தொடரில் இனி ரசிகர்களுக்கு அனுமதி கிடையாது என்று பிசிசிஐ அதிரடியாக அறிவித்துள்ளது. இதனால் ரசிகர்கள் அனைவரும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.

இந்தியா vs இங்கிலாந்து:

கடந்த ஆண்டு முழுவதும் கொரோனா வைரஸ் பரவி விளையாட்டு துறையை மிக பெரிதாக பாதித்தது. இதனால் அனைத்து தரப்பு விளையாட்டு போட்டிகளும் நடைபெறாமல் இருந்தது. அந்த வகையில் அனைத்து போட்டிகளையும் மீண்டும் நடைபெறுவதற்கு உற்சாகம் அளிக்கும் வகையில் ஐக்கிய அரபில் பிசிசிஐ மிக சிறப்பாக ஐபிஎல் போட்டியை நடத்தி அசத்தியது. அதன்பின்பு வந்த நாட்களில் அனைத்து தரப்பு போட்டிகளும் தக்க பாதுகாப்புடன் ரசிகர்கள் இன்றி நடைபெற்று வந்தது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இந்நிலையில் கொரோனா பரவல் குறைந்து வந்த காரணத்தினால், ரசிகர்களை அனுமதிக்க பிசிசிஐ முடிவு செய்தது. மேலும் அதற்காக அரசிடமும், சுகாதாரத்துறையிடமும் ஆலோசித்து கிரிக்கெட் போட்டிகளில் 50 சதவீத ரசிகர்களை அனுமதிக்க முடிவு செய்தனர். அதன்படி இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கான டெஸ்ட் போட்டி முதல் இதனை அமல்படுத்தி வந்தனர். பிசிசிஐயின் இந்த முடிவால் ரசிகர்கள் அனைவரும் மகிழ்ச்சி அடைந்தனர்.

மேலும் களத்தில் விளையாடும் வீரர்களுக்கும் நல்ல உற்சாகமும் கிடைத்தது. இந்நிலையில் கடந்த சில நாட்களாகவே இந்தியாவில் கொரோனா பரவல் சற்று அதிகரித்து வருகிறது. இந்தியாவில் மீண்டும் லாக்டவுன் ஏற்படும் நிலையும் ஏற்பட்டுள்ளது. இந்த நேரத்தில் கிரிக்கெட் போட்டிகளுக்கு ரசிகர்களை அனுமதித்தால் தொற்று அதிகமாக பரவக்கூடும் என்று எண்ணிய பிசிசிஐ ஓர் முடிவை எடுத்துள்ளது.

தமிழ்நாட்டுக்கு மருமகனான கிரிக்கெட் வீரர் பும்ராஹ் – வைரலாகும் திருமண புகைப்படம்!!

அதன்படி இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கான கடைசி மூன்று டி 20 போட்டி அதாவது இன்று நடைபெறவுள்ள போட்டி மற்றும் கடைசி இரண்டு போட்டிகளுக்கு ரசிகர்கள் அனுமதி தடை செய்யப்பட்டுள்ளது என்று பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா தெரிவித்தார். மேலும் ரசிகர்கள் டிக்கட்டிற்காக செலுத்திய கட்டணம் அனைத்தும் திரும்ப வழங்கப்படும் என்றும் அவர் அறிவித்தார். தற்போது இந்த அறிவிப்பினால் ரசிகர்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here