சசிகலா இன்று விடுதலை – ஆதரவாளர்கள் குஷி!!

0

சொத்துகுவிப்பு வழக்கிற்காக சிறைக்கு சென்ற சசிகலா, தற்போது அவரது தண்டனை காலம் முடிவுக்கு வந்துள்ளது. இதனை தொடர்ந்து சசிகலா இன்று விடுதலை ஆக உள்ளார். இதனால் இவரது ஆதரவாளர்கள் குஷியில் உள்ளார்கள்.

சசிகலா:

தமிழகத்தில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைவிற்கு பின்பு பல பிரச்சனைகளை அதிமுக கட்சி சந்தித்து வந்தது. மேலும் அதிகமாக சொத்து குவிப்பு வழக்கிற்காக சசிகலா தண்டிக்கப்பட்டு பெங்களூரு அக்ரஹாரத்தில் உள்ள மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். 4 ஆண்டுகள் தண்டனை பெற்று வந்த இவர், தற்போது இவருக்கு தண்டனை காலம் முடிவுக்கு வந்துள்ளது. இதனிடையே சிறையில் கடந்த 20ம் தேதி அன்று சசிகலாவிற்கு உடல் நலம் பாதிக்கப்பட்டது. அதனால் அவர் அங்குள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

அதன்பிறகு சசிகலா பெங்களூரு விக்டோரியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை மேற்கொண்டு வந்தார். இவருக்கு கடந்த 21ம் தேதி நடத்தப்பட்ட பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது. இதனை தொடர்ந்து மருத்துவர்கள் சசிகலாவிற்கு தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். தற்போது கொரோனா தொற்று குறைந்துள்ள நிலையில் சசிகலா நார்மல் வார்டிற்கு மாற்றப்பட்டுள்ளார். மேலும் அவரது உடல் நலமும் தற்போது சீரான நிலையில் உள்ளது. இந்நிலையில் சசிகலாவின் தண்டனை காலம் இன்றோடு முடிவடைய உள்ளது. மேலும் அவர் இன்று விடுதலை செய்யப்படவுள்ளார்.

இன்று விடுதலை:

இதுகுறித்து பேசிய சசிகலாவின் வழக்கறிஞர் ராஜா செந்தூரபாண்டியன் கூறியதாவது,’தண்டனை காலம் முடிவடைந்துள்ளதால் சசிகலா இன்று விடுதலை செய்யப்படுவார் என்று சிறை நிர்வாகம் ஏற்கனவே அறிவித்துள்ளது. மேலும் அவருக்கு விதித்த அபராத தொகை ரூ.10 கோடியே 10 ஆயிரம் ரூபாயை தனி நீதிமன்றத்தில் செலுத்தியுள்ளோம்.

விஜய்யின் மாஸ்டர் திரைப்படம் ஓடிடி யில் வெளியீடு – தேதி அறிவிப்பு!!

தற்போது சசிகலா சிகிச்சை பெற்று வரும் நிலையில், மருத்துவமனை பகுதியில் இருக்கும் காவல் நிலையத்திற்கு விடுதலை குறித்த ஆவணங்கள் காவல்துறையினர் அனுப்பவுள்ளார்கள் என்று தெரிவித்துள்ளனர். கண்டிப்பாக அவர் இன்று விடுதலை செய்யப்படுவர். விடுதலைக்கு பின்னர் மருத்துவமனையில் இருப்பது குறித்து அவரது குடும்பத்தார் முடிவெடுப்பர் என்று தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here