விஜய்யின் மாஸ்டர் திரைப்படம் ஓடிடி யில் வெளியீடு – தேதி அறிவிப்பு!!

0

நடிகர் விஜய் நடித்து திரையரங்குகளில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் திரைப்படம் மாஸ்டர் தற்போது ஓடிடி தளத்தில் வரும் ஜனவரி 29 ம் தேதி வெளியாக போகிறது என அறிவிப்புகள் வெளியிடப்பட்டிருக்கிறது.

ஓடிடி யில் மாஸ்டர் திரைப்படம்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் மற்றும் விஜய் சேதுபதி இணைந்து நடித்திருக்கும் திரைப்படம் மாஸ்டர். கொரோனா ஊரடங்கு காலத்திற்கு பின்பு திரையரங்குகளில் வெளியான முதல் திரைப்படம் இதுவாகும். கொரோனா ஊரடங்கில் திரையரங்குகள் மூடப்பட்ட நிலையில் திரைப்படங்கள் அனைத்தும் ஓடிடி இணையதளத்தில் வெளியானது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

ஓடிடி இணையதளத்தில் வெளியான சூரரைப்போற்று உள்ளிட்ட திரைப்படங்கள் மக்களை அதிக கவனம் ஈர்த்தது. இதனால் இனி வரும் காலங்களில் திரைப்படங்கள் ஓடிடி தளத்தில் வெளியாகும் எனவும் பேசப்பட்டு வருகிறது. மேலும் அனைத்து மொழிகளிலும் உருவான படங்கள் ஓடிடி தளம் பக்கம் திரும்பியுள்ளது. தொடர்ந்து திரையரங்குகளில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் மாஸ்டர் திரைப்படம் தற்போது ஓடிடியில் வெளியாக உள்ளது.

திரையரங்குகளில் வெளியான மாஸ்டர் திரைப்படம் எதிர்பார்த்ததை விட அதிக லாபம் சம்பாதித்துள்ளது. தொடர்ந்து இப்படத்தை திரையரங்குகளுக்கு வராத மக்களும் பார்க்க வேண்டும் என்ற கணிப்பில் இப்படம் அமேசான் ப்ரைம் தளத்தில் வரும் ஜனவரி 29 அன்று வெளியாக உள்ளது என அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here