மறைந்த முதல்வர் ஜெயலலிதா நினைவிடம் – இன்று முதல்வர் திறந்து வைக்கிறார்! ஏற்பாடுகள் தீவிரம்!!

0

மெரினா கடற்கரையில் எம்ஜிஆர் சமாதிக்கு அருகே மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் சமாதி அமைக்கப்பட்டது. தற்போது அங்கே நினைவிடம் கட்டப்பட்டுள்ளது. இதனை இன்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்துவைக்க உள்ளார்.

ஜெயலலிதா நினைவிடம்:

தமிழகத்தின் மறைந்த முன்னாள் முதல்வரும் மற்றும் அதிமுக கட்சியின் முன்னாள் தலைவருமான ஜெயலலிதா உடல் நல குறைவால் கடந்த 2016ம் ஆண்டு டிசம்பர் மாதம் 5ம் தேதி அன்று மரணம் அடைந்தார். இதனால் தமிழகமே அதிர்ந்து போனது. பின்பு அவரது உடலை மெரினா கடற்கரை ஓரத்தில் இருக்கும் எம்ஜிஆர் சமாதிக்கு அருகே இவரது உடலையும் அடக்கம் செய்தனர். பின்பு ஜெயலலிதாவிற்கு மெரினா கடற்கரையில் நினைவிடம் கட்டவேண்டும் என்று தமிழக அரசு முடிவு செய்தது. இதனை தொடர்ந்து கடந்த 2018ம் ஆண்டு மே மாதம் 8ம் தேதி அன்று அதற்கான கட்டுமான பணிகளும் தொடங்கப்பட்டது. மேலும் அதற்காக நிதியையும் தமிழக அரசு ஒதுக்கியது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

மிக வேகமாக நடந்த கட்டுமான பணிகள்ற் தற்போது முடிவடைந்துள்ளது. தற்போது நினைவிடம் குறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறியதாவது,”இந்த கட்டமைப்பு மொத்தம் 50 ஆயிரத்தி 422 சதுர அடியை கொண்டது. மேலும் இதற்கு சுமார் ரூ. 57.8 கோடி செலவாகியுள்ளது. மேலும் இந்த கட்டமைப்புகள் 43 மீட்டர் அகலம், 30.5 மீட்டர் நீளம், 15 மீட்டர் உயரத்தை கொண்டுள்ளது. மேலும் சுமார் ரூ.12 கோடி மதிப்பில் ஓர் அருங்காட்சியமும் கட்டப்பட்டுள்ளது. அதில் ஜெயலலிதா வாழ்க்கை வரலாறு, அவர் செய்த சாதனைகள், மக்களுக்கு செய்த பணிகள் என அனைத்தையும் தெரிவிக்கும் வகையில் அமைந்திருக்கும்.

நினைவிடம் இன்று திறப்பு:

மேலும் இந்த அருங்காட்சியம் டிஜிட்டல் முறையில் அமைக்கப்பட்டுள்ளது. நாட்டிலையே அரசியல் தலைவருக்காக இதுவே முதல் முறையாக டிஜிட்டல் முறையில் அருகாட்சியம் அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நினைவிடத்தை சுற்றி சுமார் 9 ஏக்கர் பரப்பளவில் இடங்களை சீரமைக்கப்பட்டுள்ளது. மேலும் 5 ஆண்டுக்கு ஒரு முறை இந்த நினைவிடத்தை பராமரிப்பதற்காக ரூ.9கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளனர்.

இந்தியாவிற்குள் நுழையும் மாடர்னா தடுப்பூசி – டாடா குழுமம் முயற்சி!!

தற்போது இந்த நினைவிடத்தை தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைக்கவுள்ளார். இவர் இன்று காலை 11 மணி அளவில் நினைவிடத்தை திறக்கவுள்ளார். மேலும் இந்த நினைவிடத்தை மக்களை பார்வையிட அனுமதிக்க போவதாகவும் தெரிவித்துள்ளனர். அதுமட்டுமல்லாமல் ஜெயலலிதாவின் இல்லமும் நினைவு இல்லமாக அறிவிக்கபட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here