சென்னை உயர் நீதிமன்றத்தில் 50வது தலைமை நீதிபதியாக சஞ்சீப் பானர்ஜீ பதிவியேற்பு – குவியும் வாழ்த்துக்கள்!!

0

சென்னை உயர் நீதி மன்றத்தின் தலைமை நீதிபதியாக இருந்த ஏ .பி .சாஹி கடந்த 31 டிசம்பர் இல் ஓய்வு பெற்ற பின்பு, கொல்கத்தாவின் தலைமை நீதிபதி சஞ்ஜீப் பானர்ஜீ சென்னை உயர் நீதி மன்ற தலைமை நீதிபதியாக இன்று பதவி ஏற்றுள்ளார்.

சஞ்சீப் பானர்ஜீ பதவியேற்பு

கொல்கத்தாவின் இரண்டாவது மூத்த நீதிபதியாக இருந்த நீதிபதி சஞ்ஜீப் பானர்ஜீயை சென்னை உயர் நீதி மன்றத்தின் தலைமை நீதிபதியாக நியமிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் கொலிஜியம் பரிந்துரை செய்திருந்தது. இந்த பரிந்துரைக்கு ஜனாதிபதி ராம் நாத் கோவிந்த் கடந்த வாரம் ஒப்புதல் அளித்துள்ளார். இதனை தொடர்ந்து இன்று சென்னை கிண்டியில் உள்ள ராஜ் பவனில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தலைமையில் பதவி பிரமாணம் செய்யப்பட்டது.

‘இந்த வாரத்தில் கோவிஷீல்டு தடுப்பூசி வெளியாகும்’ – சீரம் நிறுவனம் அறிவிப்பு!!

சஞ்ஜீப் பானர்ஜீ சென்னை உயர் நீதி மன்றத்தின் 50 வது தலைமை நீதிபதியாக பொறுப்பேற்றார். கல்கத்தா பல்கலை கழகத்தில் தனது பட்ட படிப்பை நிறைவு செய்து வழக்கறிஞராக பொறுப்பேற்ற இவர் உச்ச நீதி மன்றம் ,டெல்லி உயர் நீதி மன்றம் , மும்பை உயர் நீதி மன்றம் ,அலஹாபாத் உயர் நீதி மன்றம்,பாட்னா உயர் நீதி மன்றம், மற்றும் ஜார்கண்ட் ,கவுகாத்தி, ஆந்திரா, கர்நாடகா, மத்திய பிரதேசம், பஞ்சாப், ஹரியானா போன்ற உயர் நீதி மன்றங்களிலும் பணியாற்றி இருக்கிறார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

2006 ம் ஆண்டு கொல்கத்தாவின் உயர் நீதி மன்ற தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டார். தற்போது சென்னை உயர் நீதி மன்றத்தின் தலைமை நீதிபதியாக பொறுப்பேற்றுள்ளார். இந்த பதவி ஏற்புவிழாவில் தமிழக முதல்வர் திரு. எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணை முதல்வர் பன்னீர் செல்வம் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here