‘இந்த வாரத்தில் கோவிஷீல்டு தடுப்பூசி வெளியாகும்’ – சீரம் நிறுவனம் அறிவிப்பு!!

0

தற்போது சில தினங்களுக்கு முன்பு மத்திய அரசு சீரம் நிறுவனத்தின் கோவிஷீல்டு என்னும் கொரோனாவிற்கு எதிரான தடுப்பூசிக்கு ஒப்புதல் வழங்கியுள்ளது. தற்போது வரும் வாரங்களில் தடுப்பூசி வெளியாகும் என்று சீரம் நிறுவனம் அறிவித்துள்ளது.

கொரோனா தடுப்பூசி:

சுமார் 1 ஆண்டு காலமாக உலகம் முழுவதும் கொரோனா என்னும் கொடிய வைரஸ் மக்களை துன்புறுத்தி வருகிறது. தற்போது அனைத்து உலக நாடுகளும் அதற்கான தடுப்பூசியை கண்டுபிடித்து வருகின்றனர். அமெரிக்கா போன்ற நாடுகள் தடுப்பூசியை மக்களுக்கு வழங்கி வருகின்றனர். தற்போது இந்தியாவில் கொரோனவிற்கு எதிரான தடுப்பூசியை கண்டுபிடிப்பதில் அனைத்து நிறுவனங்கள் தீவிரமாக செயல்பட்டு வந்தனர். முடிவில் இந்தியாவில் 4 கொரோனாவிற்கு எதிரான தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

மேலும் மத்திய அரசு சீரம் நிறுவனம் கண்டுபிடித்த கோவிஷீல்டு என்னும் தடுப்பூசிக்கு ஒப்புதல் வழங்கியுள்ளது. இந்த தகவலை மத்திய அரசு சில தினங்களுக்கு முன்பு தெரிவித்தது. மேலும் இந்த மாதத்திற்குள் மக்கள் அனைவர்க்கும் இந்த தடுப்பூசி வழங்கப்படும் என்றும் அறிவித்திருந்தது. மேலும் தற்போது இந்தியாவில் கொரோனா தடுப்பூசி வழங்குவதற்கும் அதனை பதப்படுத்துவதற்கும் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

மீண்டும் புதிய கட்சி தொடங்கும் எஸ்ஏ சந்திரசேகர் – விஜய் ரசிகர்கள் ஷாக்!!

தற்போது தடுப்பூசி குறித்து சீரம் நிறுவனம் ஓர் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதுகுறித்து சீரம் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ஆதர் பூனவாலா கூறியதாவது, ‘கோவிஷீல்டு தடுப்பூசியை இருப்பு வைத்துக்கொள்ள அனைத்து இடர்களையும் சீரம் நிறுவனம் எடுத்துக்கொண்டது. மேலும் இதற்கான தக்க விலை கிடைத்துள்ளது. இந்த தடுப்பூசி மிகவும் பாதுகாப்பானது’ என்று அவர் கூறியுள்ளார். மேலும் கொரோனா தடுப்பூசியை வெளியிட சீரம் நிறுவனம் தயாராக உள்ளது என்றும் வரும் வாரங்களில் தடுப்பூசி வெளியாகும் என்றும் அவர் கூறியுள்ளார்.

மேலும் தனது புத்தாண்டு வாழ்த்துக்களை தனது டிவீட்டர் பக்கம் மூலம் தெரிவித்துள்ளார். மேலும் இவர் மற்றொரு ட்வீட் செய்துள்ளார். அதில் அவர் கூறியதாவது, ‘நாட்டின் பிரதமர் நரேந்திர மோடி, சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் ஹரிஷ் வரதன் மற்றும் இந்தியா தலைமை மருத்துவ கட்டுப்பாடு அதிகாரிகள் மேலும் இதற்காக பணியாற்றிய அனைவர்க்கும் தங்களது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்’ என்று கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here