டாப் ஆங்கிளில் குத்தவச்சு போஸ் கொடுத்த சமந்தா – சொக்கிப்போன ரசிகர்கள்!!

0

தமிழில் முன்னணி நடிகையாக திகழும் சமந்தா திருமணம் ஆன பிறகும் திரையுலகில் தனது இடத்தை தக்க வைத்துள்ளார். தொடர்ந்து லாக்டவுன் சமயத்தில் இருந்து புகைப்படத்தை வெளியிடுவதை வழக்கமாக வைத்திருக்கும் சமந்தா தற்போது கிளோஸப்பில் டாப் ஆங்கிளில் போட்டோஷூட் செய்து அந்த புகைப்படத்தை தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

சமந்தா

சில விளம்பர படங்கள் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானவர் சமந்தா. முதலில் மாடலிங் துறையில் இருந்த இவருக்கு தமிழில் மாஸ்கோவில் காவேரி படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. 2010 இல் வெளியான இந்த திரைப்படத்தில் பாடகியான சின்மயின் கணவர் ராகுல் இதில் ஹீரோவாக நடித்திருப்பார்.

அப்பொழுது சமந்தாவிற்கு அந்த அளவிற்கு படம் ஹிட் கொடுக்கவில்லை. அதன் பிறகே அவர் அதர்வா உடன் ”பானா காத்தாடி” என்ற படத்தில் நடித்தார். இப்படத்தில் அவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. தனது இயல்பான நடிப்பால் மக்கள் மனதில் இடம் பிடித்திருப்பார். அந்த படத்திற்கு பிறகு அவருக்கு நிறைய வாய்ப்புகள் கிடைத்தன.

samanatha
samanatha

கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கிய விண்ணைத் தாண்டி வருவாயா படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். தெலுங்கு ரீமேக்கில் இவரே நாயகி. அதன் பிறகு நீதானே என் பொன்வசந்தம் படத்தில் ஜீவாவிற்கு ஜோடியாக நடித்திருப்பார். இப்படம் இவருக்கு முன்னணி நடிகையாக அங்கீகாரத்தை பெற்று தந்தது.

samantha

மேலும் சூர்யா, விஜய் என முன்னணி நடிகர்களுடன் நடிக்கும் வாய்ப்பும் கிடைத்தது. சமந்தா நடித்த தெறி, மெர்சல் செம ஹிட் அடித்தது. தெலுங்கு நடிகரான நாகசைதன்யாவுடன் சமந்தாவிற்கு திருமணம் ஆனது. ஆனாலும் திரையுலகில் தனது மார்க்கெட்டை தக்கவைத்துள்ளார் சமந்தா. தொடர்ந்து கவர்ச்சி புகைப்படங்கள் வெளியிட்டு வரும் சமந்தா தற்போது டாப் ஆங்கிளில் போட்டோஷூட் நடத்தி புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here