முன்னாள் முதல்வரும், பாஜக தலைவருமான தேவேந்திர ஃபட்னாவிஸ்க்கு கொரோனா உறுதி!!

0

பீகாரில் அக்டோபர் 28, நவம்பர் 3 மற்றும் நவம்பர் 7 ஆகிய தேதிகளில் மூன்று கட்டங்களாக நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலுக்கான பணிகளில் கட்சிகள் தீவிரமாக இறங்கி உள்ளன. இந்நிலையில் பாஜகவின் கருத்துக் கணிப்பு பிரச்சாரத்தின் பொறுப்பாளராக உள்ள தேவேந்திர ஃபட்னாவிஸ் அவர்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கொரோனா பாதிப்பு:

மகாராஷ்டிராவின் முன்னாள் முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் கொரோனா தொற்று காரணமாக தனிமைப்படுத்தப்பட்டு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது. மருத்துவர்களின் ஆலோசனையின்படி தான் சிகிச்சையில் உள்ளதாக அவர் ட்விட்டரில் பதிவிட்டு உள்ளார். பீகார் சட்டமன்ற தேர்தலில் பாஜக.,வின் பிரச்சாரத்திற்கு முக்கிய தூணாக விளங்குபவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளது கட்சிக்கு பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது. அங்கு வாக்கு எண்ணிக்கை நவம்பர் 10 ஆம் தேதி நடைபெற உள்ளது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இது தொடர்பாக பதிவிட்ட தேவேந்திர ஃபட்னாவிஸ், “கொரோனா ஊரடங்கு தொடங்கியதில் இருந்து நான் ஒவ்வொரு நாளும் வேலை செய்து வருகிறேன், ஆனால் இப்போது சிறிது நேரம் நிறுத்தி ஓய்வு எடுக்க வேண்டும் என்று கடவுள் விரும்புகிறார் என்று தெரிகிறது. தற்போது எனக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளதால் மருத்துவர்களின் ஆலோசனையின் பேரில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறேன் என தெரிவித்துள்ளார்.

Telegram Channel  => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!

சமீபத்தில் தன்னுடன் தொடர்பு கொண்டவர்களுக்கும் வைரஸ் பரிசோதனை செய்யுமாறும் அவர் கேட்டுக்கொண்டு உள்ளார். பீகார் துணை முதல்வர் சுஷில் குமார் மோடி அவர்களுக்கு சில நாட்களுக்கு முன்னர் கொரோனா பாதிப்பு உறுதியானது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here