“எனக்கு தா எப்போதும் முதலிடம்” – டக் அவுட்டில் சாதனை படைத்த ஹிட் மேன்!!

0

மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனான ரோஹித் சர்மா, CSK அணிக்கு எதிரான போட்டி மூலம், மோசமான மாபெரும் சாதனையை படைத்துள்ளார்.

ரோஹித் சர்மா:

இந்தியன் பிரீமியர் லீக் தொடரில், சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணியானது, தனது சொந்த மண்ணில் மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்த்து விளையாடியது. இந்த போட்டியில், டாஸ் வென்ற CSK அணியின் கேப்டன் தோனி பில்டிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து, மும்பை அணியின் தொடக்க வீரர்களாக கேமரூன் கிரீன் மற்றும் இஷான் கிஷன் களமிறங்கினர்.

இவர்களில், துஷார் தேஷ்பாண்டே பந்தில், கேமரூன் கிரீன் 6 ரன்னில் வெளியேற, அடுத்த ஓவரை தீபக் சஹர் வீசினார். இவரது பந்தில், இஷான் கிஷன் (7) மற்றும் ரோஹித் சர்மா (0) என அடுத்தடுத்து வெளியேறினார். இந்த போட்டியில், ரோஹித் சர்மா டக் அவுட்டானது மூலம், ஐபிஎல் அரங்கில் மாபெரும் சாதனையை படைத்துள்ளார்.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

அதாவது, இதற்கு முன் பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் டக் அவுட்டான ரோஹித், ஐபிஎல் வரலாற்றில், அதிக (15) முறை இந்த சாதனையை படைத்து, மந்தீப் சிங், தினேஷ் கார்த்திக், சுனில் நரைன் ஆகியோருடன் முதலிடத்தில் பகிர்ந்து கொண்டிருந்தார். ஆனால் தற்போது, CSK எதிராக டக் அவுட்டானது மூலம், (16) இந்த பட்டியலில் முதலிடத்தை தனக்கு மட்டுமே சொந்தமாக்கி உள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here