மீண்டும் எகிற தொடங்கிய பொன்னியின் செல்வன் 2 வசூல் – இதுவரை இத்தனை கோடி வசூலா?

0
மீண்டும் எகிற தொடங்கிய பொன்னியின் செல்வன் 2 வசூல் - இதுவரை இத்தனை கோடி வசூலா?
மீண்டும் எகிற தொடங்கிய பொன்னியின் செல்வன் 2 வசூல் - இதுவரை இத்தனை கோடி வசூலா?

மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் 2 படத்தின் மொத்த வசூல் விவரம் குறித்து சமூக வலைத்தளங்களில் தகவல் வெளியாகியுள்ளது.

பொன்னியின் செல்வன் 2:

எம்ஜிஆர் காலத்தில் இருந்து பல இயக்குனர்கள் பொன்னியின் செல்வன் நாவலை படமாக எடுக்க முயற்சி செய்து தோல்வி அடைந்தனர். ஏன் சமீபத்தில் இறந்த மனோபாலா கூட இப்படத்தை எடுக்க முயற்சி செய்துள்ளார். தற்போது மணிரத்னம் பொன்னியின் செல்வனை இரண்டு பாகங்களாக எடுத்து இயக்கி சாதனை படைத்துள்ளார். இப்படத்தின் முதல் பாகம் 1000 கோடிகளை வசூல் செய்த நிலையில் தற்போது இரண்டாம் பாகம் வெளியாகி வெற்றி நடை போட்டு வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இப்படம் வெளியாகி 8 நாட்கள் கடந்த நிலையில் இதுவரை உலக அளவில் ரூ. 255 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது. மேலும் தமிழகத்தில் மட்டுமே ரூ. 93 கோடி வரை வசூல் செய்துள்ளது. ஆரம்பத்தில் வசூல் அதிகமாக இருந்தாலும், போக போக குறைய தொடங்கியது. இருப்பினும் நேற்றில் இருந்து படத்தின் வசூல் எகிற தொடங்கியுள்ளது. இதை வைத்து பார்க்கும்போது இந்த வார இறுதியில் ரூ. 300 கோடியை தொடும் என படக்குழுவினரால் எதிர்பார்க்கப்படுகிறது. பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here