Sunday, May 5, 2024

பயணசீட்டு இல்லாதவர்களுக்கு அபராதம் விதித்த ரயில்வேத்துறை – 561 கோடி வரை வசூல்!!

Must Read

இந்த 2019-2020 நடப்பாண்டில் மட்டும் ரயில்வே துறை முறையான பயணசீட்டு இல்லாத காரணத்திற்காக பயணிகளிடம் இருந்து 561.73 கோடி ரூபாய் வரை அபராத தொகையாக வசூலித்துள்ளது.

முறையான பயணசீட்டு:

இந்தியாவின் தலைசிறந்த துறை என்று கருதப்படுகிறது ரயில்வேத்துறை. இந்தியாவில் பெரும்பாலான மக்கள் பயணத்திற்கு தேர்தெடுக்கும் போக்குவரத்துக்கு முறை என்றால் அது, ரயில்கள் தான். இப்படியாக இருக்க, இதில் பயணம் செய்யும் போது முறையான பயணசீட்டு வைத்திருத்தல் அவசியம்.

அப்படி பயணசீட்டு பெறாமல் பயணித்தால் ரயில்வேத்துறை அதிகாரிகள் சார்பில் அபராத தொகையாக ரூபாய் 250 வசூலிக்கப்படும். அப்படி அபராத தொகை தரமறுப்பவர்களை ரயில்வேத்துறை அதிகாரிகள், ரயில்வே பாதுகாப்பு சட்டத்தின் கீழ் மாஜிஸ்திரேட் முன் பயணசீட்டு இல்லாதவர்களை நிறுத்துவர் , அங்கு அவர்களுக்கு அபராத தொகை ரூபாய் 1000 வரை விதிக்கப்படும்.

indian railway station
indian railway station

அப்படியும் அவர்கள் தொகையினை தர மறுத்தால் அவர்களுக்கு 6 மாத காலம் சிறைத்தண்டனை விதிக்கப்படும். இது, ரயில்வேத்துறை சார்பில் பின்பற்றப்பட்டு வரும் விதிமுறைகள் ஆகும்.

வசூலிக்கபட்ட பணம்:

சட்டங்கள் இப்படியாக இருக்க, மத்திய பிரதேஷ் மாநிலத்தில் உள்ள ரயில்வேதுறை இது தொடர்பாக ஒரு அறிக்கையை வெளியிட்டனர். அதில் அவர்கள் தெரிவித்து இருந்தது என்னவென்றால், “இந்த வருடம் மட்டும் ரூபாய் 561.73 கோடி ரூபாய் அபராத தொகையாக முறையான பயணசீட்டு இல்லாதவர்களிடம் இருந்து பெறப்பட்டுள்ளது. இந்த நடப்பாண்டில் 1 கோடிக்கும் அதிகமானோர் முறையான பயணசீட்டு இல்லாமல் ரயில்களில் பயணித்துள்ளனர்.

கூடுதலாக இது கடந்த ஆண்டை விட 6 சதவீதம் அதிகம்.” இதனை மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த ஆர்வலர் சந்திர சேகர் கவுர் தாக்கல் செய்த ஆர்டிஐ விண்ணப்பத்தின் கீழ் இந்த விவரங்களை வெளியிட்டுள்ளது, ரயில்வேத்துறை.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

PF சந்தாதாரர்களுக்கு ஜாக்பாட்., ரூ.50,000 வரையிலும் போனஸ் கிடைக்கும்? EPFO-வின் மாஸ் விதிகள்!!!

அரசு மற்றும் தனியார் துறைகளில் பணிபுரியும் ஊழியர்களின் ஓய்வூதிய கால நலன் கருதி, மாதாந்திர ஊதியத்தில் PF தொகை பிடித்தம் செய்யப்பட்டு வருகிறது. இவ்வாறு பிடித்தம்...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -