சீனாவைச் சேர்ந்த செயலிகளை நமது மொபைலில் இருந்து நீக்கம் செய்யும் ‘ரிமூவ் சீனா ஆப்ஸ்’ (Remove China Apps) என்கிற இந்திய செயலி, கூகிள் பிளே ஸ்டோரில் இருந்து நீக்கம் செய்யப்பட்டு உள்ளது.
இந்திய செயலி:
சீனாவில் இருந்து பரவிய கொரோனா வைரஸ், டிக்டாக் செயலி மற்றும் தற்போது இந்தியா மற்றும் சீனாவுக்கு இடையே லடாக் எல்லையில் நிலவி வரும் போர் பதற்றம் உள்ளிட்ட காரணங்களால் சீனா மீது இந்தியர்களுக்கு வெறுப்பும், கோபமும் அதிகரித்து உள்ளது. இதனால் சீன பொருட்களை வாங்க மாட்டோம் உள்ளிட்ட பல கோரிக்கைகள் சமூக வலைதளங்களில் வைரலானது. இந்நிலையில் நமது மொபைலில் இருக்கும் சீன செயலிகளை ரிமூவ் செய்யும் ‘ரிமூவ் சீனா ஆப்ஸ்’ என்கிற செயலி மே மாதம் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.
இந்த செயலி மூலம் நமது மொபைலில் உள்ள சீன செயலிகளை கண்டறிந்து ரிமூவ் செய்து கொள்ளலாம். இதுவரை 50 லட்சத்திற்கும் அதிகமானோரால் பதிவிறக்கம் செய்யப்பட்ட இந்த செயலி தற்போது கூகிள் பிளே ஸ்டோரில் இருந்து நீக்கப்பட்டு உள்ளது. ஏற்கனவே டிக்டாக் செயலிக்கு மாற்று என கூறப்பட்ட மிட்ரான் செயலியும் கூகிள் பிளே ஸ்டோரில் இருந்து நீக்கப்பட்டு உள்ளது. இந்த இரண்டு செயலிகளால் சீன வர்த்தகத்தில் பாதிப்பு ஏற்பட்டதால் அவை நீக்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.
To Subscribe Youtube Channel | Click Here |
To Join WhatsApp Group | Click Here |
To Join Telegram Channel | Click Here |