ஒரு பைக்கில் 2 பேர் சென்றால் அபராதம் – சென்னை மாநகராட்சி அதிரடி..!

0

ந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா தோற்று அதிகரித்து வரும் நிலையில் தற்போது அதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. தமிழத்தில் மேலும் தற்போது சென்னை உட்பட ஒரு சில மாவட்டங்களில் கொரோனா பரவி வருகிறது. இதற்கான தடுப்பு நடவடிக்கைகளை அரசு செயல்படுத்தி வருகிறது.கொரோனாபாதிப்பு வேகமாக உயர்ந்துவருவதைத் தொடர்ந்து தமிழத்தில் சென்னையில் கடும் நடவடிக்கைகள் அமல் படுத்துகின்றது தமிழக அரசு.

ஜூன் 30-ந் தேதி வரை ஊரடங்கு உத்தரவு

தமிழகத்தில் ஜூன் 30-ந் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது. சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்கள் தவிர மற்ற மாவட்டங்களில் பொது போக்குவரத்து கட்டுப்பாடுகளுடன் அனுமதிக்கப்பட்டுள்ளது. சென்னையில் ஆட்டோ, டாக்சிகள் ஓட டாக்சிகளில் டிரைவர் தவிர்த்து 3 பேர், ஆட்டோக்களில் டிரைவர் தவிர்த்து 2 பேர், மோட்டார் சைக்கிள் போன்ற இருசக்கர வாகனங்களில் ஒருவர் மட்டுமே செல்ல அனுமதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளதால், அதனை கட்டுப்படுத்த போலீசார் நேற்று முதல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

வாகன ஓட்டிகளுக்கு கடும் விதிமுறைகள்

சென்னையில் வாகனங்களில் பொதுமக்கள் அதிகம் சுற்றி வருகின்றனர் அதனை தடுக்க வாகன ஓட்டிகளுக்கு கடும் கட்டுப்பாடுகளை சென்னை போலீசார் விதித்துள்ளனர். பைக்கில் இரண்டு பேர் சென்றாலே அவர்களை வளைத்து பிடித்து ரூ.500 அபராதம் விதிக்கிறார்கள். மாஸ்க் அணியாமல் சென்றாலும் அபராதம் விதிக்கப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் பெரும் கவலை அடைந்துள்ளனர். மார்ச் 25ம் தேதி தொடங்கிய ஊரடங்கு, ஐந்தாவது கட்டமாக வரும் ஜூன் 30ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஆனால் தமிழகத்தில் பேருந்து போக்குவரத்து, ரயில் போக்குவரத்து, அனைத்து வகை தொழில்கள், கடைகள், வர்த்தக நிறுவனங்கள் இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.எனினும் சென்னை உள்பட கட்டுப்பாடு உள்ள மாவட்டங்களில் டாக்சிகளில் ஓட்டுநர் தவிர்த்து 3 பேர், ஆட்டோக்களில் டிரைவர் தவிர்த்து 2 பேர், மோட்டார் சைக்கிள் போன்ற இருசக்கர வாகனங்களில் ஒருவர் மட்டுமே செல்ல சென்னையில் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது, ஆனால் மக்கள் பாதிப்புகளை உணராமல் எப்போதும் போல் இயல்பாக வாகனங்களில் பயணிக்கிறார்கள். பல இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. கிட்டத்தட்ட இயல்பு நிலை திரும்பியது போன்று சென்னையில் காணப்படுகிறது.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here