கொரோனா சிகிச்சைக்காக ரிலையன்ஸ் அம்பானி கட்டும் முதல் பிரத்யேக மருத்துவமனை..!

0

கொரோனா தடுப்பு நடவடிக்கையில் இந்தியாவின் மிகப் பெரிய நிறுவனமான ரிலையன்ஸும் இணைந்துள்ளது. மும்பை மாநகராட்சியுடன் இணைந்து ரிலையன்ஸ் பௌண்டேஷன் நிறுவனம் இரண்டு வார காலத்துக்குள் புதிய மருத்துவமனையைக் கட்டுகிறது.

ரிலையன்ஸ் நிறுவனம்..!

இந்தியாவில் ரிலையன்ஸ் நிறுவனம் அளிக்கும் நிதியில் கட்டப்படும் முதல் மருத்துவமனை ஆகும். இந்த மருத்துவமனையில் கொரோனா பாதித்த 100 பேருக்கு சிகிச்சை அளிக்க முடியும். வென்டிலேட்டர், பேஸ்மேக்கம், டையாலிஸிஸ் உள்ளிட்ட உபகரணங்கள் இருக்கின்றன. மேலும், கொரோனா பாதித்த நாடுகளிலிருந்து இந்தியா திரும்புவர்களை தனிமைப்படுத்துவதற்கான சிறப்பு மருத்துவ வசதிகளையும் ரிலையன்ஸ் நிறுவனம் ஏற்படுத்துகிறது.

சிறப்பு மருத்துவ முகாம்..!

மகாராஷ்டிரா மாநிலம் லோதிவலி பகுதியில் முழுவதுமாக தனிமைப்படுத்துவதற்கான சிறப்பு மருத்துவ முகாமை ஏற்பாடு செய்கிறது. அந்த முகாம், மாவட்ட நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்படும். ஒரு நாளைக்கு ஒரு லட்சம் முகக் கவசம் உற்பத்தி செய்யவுள்ளோம்.

கொரோனா பாதிக்கப்பட்டவர்களுக்காக அவசரச் சேவை செய்யும் வாகனங்களுக்கு இலவச எரிபொருள்களை வழங்குவோம். கொரோனாவால் பாதிப்பால் வாழ்வாதரத்தை இழந்தவர்களுக்கு ரிலையன்ஸ் நிர்வாகம் சார்பில் தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து நாட்டின் பல்வேறு பகுதிகளில் அவர்களுக்கு இலவசமாக உணவு வழங்கப்படும் என்று ரிலையன்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here