சசிகலாவின் திடீர் உடல்நலக்குறைவில் சந்தேகம் – மனித உரிமைகள் ஆணையத்தில் புகார்!!

0

சொத்து குவிப்பு வழக்கில் சிறைக்கு சென்ற சசிகலா நடராஜன் விடுதலையாக இன்னும் சிலநாட்களே உள்ளநிலையில் அவருக்கு திடீரென உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளது. சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமத்திக்கப்பட்டிருக்கும் அவரது திடீர் உடல்நலக்குறைவு குறித்து சந்தேகம் எழுந்துள்ளதாக மனித உரிமைகள் ஆணையத்தில் புகாரளிக்கப்பட்டுள்ளது.

உடல்நலக்குறைவு:

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் மீதான சொத்துகுவிப்பு வழக்கில் உடந்தையாக இருந்ததாக குற்றம் சாட்டப்பட்டு கடந்த 4 ஆண்டுகளாக பெங்களூரு பரப்பன அஃக்ராஹாரம் சிறையில் இருந்து வந்த சசிகலா தனது தண்டனை காலம் முடிந்து வரும் 27ம் தேதியன்று விடுதலையாகவுள்ள நிலையில் அவருக்கு திடீரென காய்ச்சல் மற்றும் மூச்சுத்திணறல் ஏற்பட்டதால் சிறைத்துறை மருத்துவர்களின் பரிந்துரையின் பேரில் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

‘இயேசு அழைக்கிறார்’ பால் தினகரனுக்கு சொந்தமான 28 இடங்கள் – 2வது நாளாக வருமான வரித்துறையினர் சோதனை!!

இந்நிலையில் சசிகலாவின் இந்த திடீர் உடல்நலக்குறைவு சந்தேகத்தை ஏற்படுத்துவதாக பெங்களூரு மனித உரிமைகள் ஆணையத்தில் வழக்கறிஞர் ராஜராஜன் புகாரளித்துள்ளார். சசிகலா விடுதலையாக இன்னும் வெகு சில நாட்களே உள்ள நிலையில் அவரது இந்த திடீர் உடல்நலக்குறைவு தமக்கு சந்தேகத்தை ஏற்படுத்துவதாகவும், அதுகுறிதது விசாரணை மேற்கொள்ளவேண்டுமெனவும் அவர் தனது புகாரில் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here