கொரோனா தடுப்பூசி செலுத்துவதில் கர்நாடகா முன்னிலை – கடைசி இடத்தில் தமிழகம்!!

0

நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது. தற்போது கொரோனா தடுப்பூசி செலுத்துவதில் கர்நாடகம் முதலிடம் பெற்றுள்ள நிலையில் தமிழகம் கடைசி இடத்தில் உள்ளது.

கொரோனா தடுப்பூசி:

நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி போடுவதற்கான ஆயத்தப்பணிகள் முடிவடைந்து தற்போது ஒவொரு மாநிலத்திலும் அமைக்கப்பட்டுள்ள பல்வேறு மையங்களின் மூலமாக தடுப்பூசி போடும் பணி துவங்கபட்டு கடந்த 5 நாட்களாக நடந்துவருகிறது. இந்த தடுப்பூசியானது முதற்கட்டமாக 7.86 லட்சம் மருத்துவப்பணியாளர்களுக்கும், முன்கள பணியாளர்களுக்கும் செலுத்தப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாநிலத்திலும் இந்தபணி தொடர்ந்து நடந்து வருகிறது.

50 ஆயிரம் புள்ளிகளை கடந்த சென்செக்ஸ் – வரலாற்றில் முதல்முறை!!

தற்போது இப்பணிகள் குறித்த அறிக்கை ஒன்றினை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதில் “இந்தியா முழுவதும் தற்போது 20மாநிலங்களிலுள்ள ஆயிரக்கணக்கான மையங்களில் தடுப்பூசி போடும் பணிகள் நடந்து வருகின்றன.இதுவரை மொத்தமாக 7,86,842 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. நேற்று (புதன்கிழமை) மாலை வரை மட்டும் 1,12,007 நபர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதுவரை பக்கவிளைவுகளால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 82 ஆக உள்ள நிலையில் மற்றவர்கள் நலமாகவே உள்ளனர்.

சசிகலாவிற்கு தீவிர சிகிச்சை – கொரோனா பரிசோதனை முடிவுகள் வெளியீடு!!

புள்ளி விவரங்களின் அடிப்படையில் தற்போது அதிகபட்சமாக கர்நாடகத்தில் 1,19,186 பேருக்கும் ஆந்திராவில் 88,145 பேருக்கும் தடுப்பூசி செலுத்த பட்டுள்ள நிலையில் இந்த பணியில் தமிழகமும், புதுச்சேரி மற்றும் பஞ்சாப் ஆகிய மாநிலங்களும் கடைசி இடத்தில் இருக்கின்றன. தமிழகத்தில் 34.9%, புதுசேரியில் 34.6%, பஞ்சாபில் 27.6% அளவில் மட்டுமே இந்தப்பணிகள் நிறைவடைந்துள்ளதாகவும், இது நிர்ணயிக்கப்பட்ட அளவை விட மிக குறைவாகும் என தெரிகிறது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இதுகுறித்து விளக்கமளித்த மத்திய சுகாதார துறை செயலர் ராஜேஷ் பூஷன், “50%க்கும் குறைவாக தடுப்பூசி செலுத்தப்பட்ட மாநிலங்களுடன் கலந்து ஆலோசித்து அங்குள்ள நடைமுறை சிக்கல்கள் மற்றும் மக்களின் அச்சம் ஆகியனவற்றை சரி செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். இது ஒன்றும் மிக பெரிய பிரச்னை அல்ல. ஏற்கனவே அம்மை தடுப்பூசி திட்டம் மற்றும் போலியோ சொட்டுமருந்து திட்டம் ஆகியன தொடங்கப்பட்டபோது மக்கள் இவ்வாறுதான் அச்சமடைந்தனர். அதன் பிறகு அரசு எடுத்த நடவடிக்கைகள் மூலமாக அனைத்து பிரச்னைகளும் சரி செய்யப்பட்டு மக்கள் விழிப்புணர்வடைந்தனர். அதுபோலவே கொரோனா தடுப்பூசி விஷயத்திலும் விழிப்புணர்வை ஏற்படுத்த முடியும்” என்று தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here