#INDvsAUS கோப்பையுடன் நாடு திரும்பிய இந்திய வீரர்கள் – உற்சாகமாக வரவேற்ற நிர்வாகிகள்!!

0

ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம் முடிவடைந்து விட்டது. தற்போது இந்தியா அணியினர் பார்டர் கவாஸ்கர் கோப்பை மற்றும் டி 20 கோப்பையுடன் இந்தியா திரும்பியுள்ளனர். அவர்களுக்கு மும்பை கிரிக்கெட் சங்க நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

இந்தியா vs ஆஸ்திரேலியா:

ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்தியா அணி 3 ஒருநாள் 3 டி 20 மற்றும் 4 டெஸ்ட் தொடர்களை பங்கேற்க சென்றுள்ளது. ஒருநாள் தொடரை 1-2 என்ற கணக்கில் இந்தியா அணி தோற்றது. அதன்பின்பு நடத்த டி 20 தொடரில் இந்தியா அணி 2-1 என்ற கணக்கில் வெற்றியை பதிவு செய்து அசத்தியது. அதன்பிறகு டெஸ்ட் தொடர் நடைபெற்றது. இதில் முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா அணி மிக சிறப்பாக செயல்பட்டது. மேலும் இந்தியா அணி வரலாறு காணாத வகையில் மிக மோசமான தோல்வியை தழுவியது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

முதல் போட்டி முடிந்த பின்பு இந்தியா அணியின் கேப்டன் விராட் கோஹ்லி தனது மனைவியின் பிரசவ காலம் என்பதால் அவர் நாடு திரும்பினார். இதனால் மற்ற 3 போட்டிகளில் ரஹானே இந்தியா அணியை வழிநடத்தினார். இரண்டாவதாக நடத்த டெஸ்ட் போட்டியில் இந்தியா அணி தனது அசத்தலான வெற்றியை பதிவு செய்து அசத்தியது. மேலும் 3 வது டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தது. வெற்றியை தீமானிக்கும் வகையில் நடந்த 4 வது டெஸ்ட் போட்டியில் ரிஷாப் பாண்டின் அதிரடி ஆட்டத்தால் இந்தியா அணி வெற்றி பெற்றது. மேலும் புகழ்மிக்க பார்டர் கவாஸ்கர் கோப்பையை கைப்பற்றி அசத்தியது. இதனால் அனைத்து தரப்பினரும் தங்களது பாராட்டுகளை தெரிவித்து வந்தனர்.

நாடு திரும்பும் இந்தியா அணியினர்:

தற்போது போட்டிகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில் இந்தியா அணியினர் நாடு திரும்பியுள்ளனர். பிரிஸ்பேனில் இருந்து ரஹானே, ரவி சாஸ்திரி, ரோஹித் சர்மா, தாகூர், ப்ரித்வி ஷா போன்றோ மும்பை வந்துள்ளனர். அங்கே அவர்களுக்கு மும்பை கிரிக்கெட் சங்கம் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

50 ஆயிரம் புள்ளிகளை கடந்த சென்செக்ஸ் – வரலாற்றில் முதல்முறை!!

மேலும் ரிஷாப் பாண்ட் டெல்லி வந்தடைந்தார். நடராஜன் பிரிஸ்பேனில் இருந்து பெங்களூரு வந்து அங்கிருந்து தனது சொந்த ஊரான சேலத்திற்கு சென்றுள்ளார். மேலும் அஸ்வின், சுந்தர் மற்றும் பந்துவீச்சு பயிற்சியாளர் பரத் அருண் ஆகியோர் தற்போது துபையில் உள்ளார்கள். மேலும் அவர்கள் வரும் வெள்ளிக்கிழமை அன்று இந்தியா வந்தடைவார்கள் என்று தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here