தளபதி 65 இல் நடிக்கும் ‘விஜய் டிவி’ பிரபலம் – ரசிகர்கள் குஷி!!

0

தளபதி 65 வது படத்தில் ஏற்கனவே தொடர்ந்து இரண்டு முறை நடித்த குழந்தை பிரபலம் தற்போது தளபதியுடன் 3 வது படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. மேலும் அவரை தளபதிக்கு பிடித்துப்போனதால் தான் அவரை தொடர்ந்து தனது படங்களில் நடிக்கவைக்கிறார் என்று சிலர் கூறிவருகின்றனர்.

தளபதி 65:

சுமார் 1 ஆண்டுகாலமாக படப்பிடிப்பு முடிந்தும் வெளிவராமல் இருந்த மாஸ்டர் திரைப்படம் கடந்த வாரம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்கில் வெளியானது. இந்த படத்திற்காக தளபதி ரசிகர்கள் மட்டுமல்லாமல் அனைவரும் வெகுவாக காத்திருந்தனர். தற்போது மாஸ்டர் திரைப்படம் திரையரையரங்கில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டு வருகிறது. மேலும் மாஸ்டர் திரைப்படம் வசூல் மழையை அள்ளி வருகிறது. தற்போது தளபதி 65 பற்றிய ஓர் தகவல் வெளியாகியுள்ளது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

அது என்னவென்றால் பிகில், மாஸ்டர் திரைப்படத்தில் தளபதியுடன் நடித்த குழந்தை பிரபலம் தளபதி 65லும் இணையப்போகிறாராம். அது வேறு யாருமில்லை. நம்ம பூவையார் தான். சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் அனைவரையும் கவர்ந்தவர் தான் பூவையார். இவரது கானா பாடல்களை கேட்பதற்காகவே தனி பட்டாளமே உள்ளது. முதன்முறையாக அட்லீ இவரை பிகில் படம் மூலம் அறிமுகப்படுத்தினார். ஆனால் அந்த படத்தில் ஒரு காட்சிகளில் மட்டுமே வந்து போவார் பூவையார். இருப்பினும் அந்த காலகட்டத்தில் பூவயாரை தளபதிக்கு ரொம்ப பிடித்துவிட்டதாம்.

மீண்டும் தளபதியுடன் இணையும் குழந்தை பிரபலம்:

மேலும் பூவையரின் கானா பாடல் தளபதிக்கு ரொம்ப பிடிக்குமாம். அதன்பிறகு மாஸ்டர் திரைப்படத்தில் பூவையார் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அதில் தளபதி பூவயாரை தனது இடுப்பில் தூக்கி கொண்டு சுற்றி வருவார்.

மீண்டும் அதிகரிக்கும் தங்கத்தின் விலை – கவலை அடையும் நகைப்பிரியர்கள்!!

தற்போது சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் இயக்கத்தில் தளபதி 65 படத்திலும் பூவையார் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளாராம். இதுகுறித்து சிலர்,”தல அஜித் தான் தனக்கு பிடித்தவர்கள் கூட தொடர்ந்து படம் நடித்து வருவார் தற்போது அதே பாணியில் விஜய்யும் வருகிறார்” என்று கூறிவருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here