மலிவு விலையில் ரியல்மி V11 5ஜி ஸ்மார்ட்போன் – சீனாவில் அறிமுகம்!!

0

ரியல்மி நிறுவனத்தின் லேட்டஸ்ட் மாடல் ஸ்மார்ட் போனான ரியல்மி V11 ஸ்மார்ட்போன் தற்போது சீனாவில் வெளியாகியுள்ளது. மேலும் இந்த போனின் விலை மற்றும் சிறப்பம்சங்கள் பற்றிய தகவலும் தற்போது வெளியாகியுள்ளது.

ரியல்மி:

இந்த 2021ம் ஆண்டில் ரியல்மி நிறுவனம் இந்திய மற்றும் உலக அளவில் பலவிதமான 5ஜி ஸ்மார்ட்போன்களை பலவிதமான விலை பிரிவுகளில் அறிமுகப்படுத்தி வருகிறது. தற்போது தனது தாயகமான சீனாவில் மலிவு விலையில் ரியல்மி V11 5ஜி ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. இந்த நிறுவனம் நேற்று இந்தியாவில் அதன் எக்ஸ் 7 தொடர் மாடல்களை ரூ.19,999க்கு அறிமுகம் செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இந்த ரியல்மி V11 5ஜி ஸ்மார்ட்போன் 6.52 இன்ச் எச்டி டிஸ்பிலேவை கொண்டுள்ளது. இதன் மைக்ரோ எஸ்.டி கார்ட் போடுவதற்கு 1TB வரை விரிவாக்கம் பெற்றுள்ளது. கேமராவை பொறுத்தவரை பின்பக்கத்தில் 13 மெகா பிக்சல் முதன்மை சென்சார் மற்றும் 2 மெகாபிக்ஸல் டெப்த் சென்சார் மற்றும் டூயல் கேமராவை பெற்றுள்ளது. மேலும் செலஃபீ கேமராவை பொறுத்தவரை 8 மெகாபிக்சலை கொண்டுள்ளது.

ரூ.12,110 கோடி விவசாய கடன் தள்ளுபடி – சட்டப்பேரவையில் முதலமைச்சர் அறிவிப்பு!!

இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 10 அடிப்படையில் இயங்குகிறது. மேலும் 18 W பாஸ்ட் சார்ஜிங் வசதியை கொண்டுள்ளது. இதன் பேட்டரி 5000mAh வசதியை பெற்றுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் 3.5 மிமீ ஹெட்ஜக் மற்றும் சி டைப் சார்ஜிங்கை பெற்றுள்ளது. இதன் விலை ரூ.20,000 நிர்ணயித்துள்ளனர். மேலும் இந்த ஸ்மார்ட்போனின் இந்தியா அறிமுகம் பற்றிய தகவல் வெளிவரவில்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here