‘பேரறிவாளன் குறித்து குடியரசு தலைவரை சந்தித்தால் திமுக உடன் வர தயார்’ – ஸ்டாலின் அறிவிப்பு!!

1

பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரின் விடுதலை தொடர்பாக முதல்வர் பழனிச்சாமி, குடியரசு தலைவரை சந்திக்க சென்றால் திமுகவின் எம்பிக்கள் முதல்வருடன் வர தயார் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

முக ஸ்டாலின்

பேரறிவாளன் உட்பட ஏழு பேரின் விடுதலைக்கு தமிழக ஆளுநர் முடிவு எடுக்க கூறி உச்சநீதி மன்றம் சென்ற மாதம் உத்தரவிட்டிருந்தது. இது குறித்து முடிவு எடுக்கும்படி தமிழக ஆளுநருக்கு ஒரு வார கால அவகாசம் கொடுக்கப்பட்டிருந்தது. இந்த கால அவகாசத்தில் ஆளுநர் எந்த அறிவிப்பும் வெளியிடாமல் இருந்து வந்தார். தமிழக ஆளுநர் தரப்பு வக்கீல் துஷார் மேத்தா நேற்று உச்சநீதிமன்றத்தில் ஒரு பிராமண பத்திரிகையை தாக்கல் செய்துள்ளார்.

அடுத்த 48 மணிநேரத்தில் வானம் பனிமூட்டத்துடன் காணப்படும் – வானிலை மையம் தகவல்!!

அதில், ‘பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரின் விடுதலை குறித்து நான் முடிவு எடுக்க முடியாது. இது நாட்டின் குடியரசு தலைவர் சம்பந்தப்பட்ட விஷயம்’ என கூறி பேரறிவாளனின் கருணை மனுவை நிராகரித்துள்ளார். இந்நிலையில் திமுக தலைவர் முக ஸ்டாலின் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில், ”2021 சட்டமன்ற தேர்தல் வரும் வேலையில் தான் ஏழு பேரின் விடுதலை குறித்து முதல்வருக்கு நினைவு வந்திருக்கிறது. ஜனவரி 25 ஆம் தேதி அன்றே தமிழக அரசின் தீர்மானத்தை நிராகரித்து, முடிவு எடுக்க முடியாது என கூறிய தமிழக ஆளுநரை ஜனவரி 29 ம் தேதி சந்தித்து மீண்டுமாக விடுதலை குறித்து வலியுறுத்தியதாக முதல்வர் கூறுகிறார்.

Telegram Channel  => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!

இதுபோல நாகரிகம் இல்லாத அரசியல் நாடகம் எங்காவது இருக்குமா? விடுதலை தொடர்பான ஆவணங்கள் அவரிடம் இல்லாதநிலையில் முதல்வர் எதற்காக ஆளுனரை சந்திக்கவேண்டும்? தேர்தலுக்காக நாடகம் போடாமல் நல்ல எண்ணத்துடன் முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும். 7 பேர் விடுதலையில் நாடகம் போட்டு வேடம் கட்டுவதை முதலில் நிறுத்துங்கள். 7 பேருக்கு மரணதண்டனை வழங்கி சிறையில் அடைக்கப்பட்ட 8 ஆண்டுகளில் அவர்களுக்கான மரண தண்டனையை ரத்து செய்ய வைத்த திமுகவை பார்த்து நாடகம் போடுகிறார்கள் என்று கூறுவதா? என கேள்வி எழுப்பி உள்ளார். மேலும் பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரின் விடுதலை தொடர்பாக முதல்வர் பழனிச்சாமி நாட்டின் குடியரசு தலைவரை சந்திக்க சென்றால் திமுக எம்பிக்கள் அவருடன் வர தயார் எனவும் கூறியுள்ளார்.

1 COMMENT

  1. Why all political parties including DMK,AIADMK NAAM TIMZHER,and other political leaders are supporting the criminals who have are punished by SC,also who involved in anti national activities

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here