விவசாயிகள் போராட்டத்தால் எதிர்க்கட்சிகள் அமளி – மாநிலங்களவை பிப்ரவரி 8ம் தேதி ஒத்திவைப்பு!!

0

வேளாண் சட்டங்களை திரும்ப பெற கூறி கடந்த செவ்வாய்க்கிழமை நாடாளுமன்றத்தில் நடக்கும் கூட்டத்தில் எதிர்கட்சிகள் அமளியில் ஈடுபட்டனர். இதன் எதிரொலியாக நாடாளுமன்றத்தில் மாநிலங்களவை வரும் 8ம் முதல் வரை ஒத்திவைக்கப்பட்டது.

நாடாளுமன்ற கூட்டத்தொடர்:

தற்போது முதல் கட்ட நாடாளுமன்ற கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தொடர் கடந்த வாரம் துவங்கியது. மேலும் வரும் 15ம் தேதி வரை முதல் கட்ட கூட்டத்தொடர் நடைபெறவுள்ளது. கடந்த திங்கள் கிழமை அன்று மத்திய பொது பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அதன் பின்பு மாநிலங்களவை மற்றும் மக்களவை நடைபெற்றது.

Telegram Channel  => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!

விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் வேளாண் சட்டங்களை திரும்ப பெற கூறி எதிர்க்கட்சிகள் கடந்த செவ்வாய்க்கிழமை காலை முதல் அமளியில் ஈடுபட்டனர். இதன் காரணமாக மக்களவை மற்றும் மாநிலங்களவை இன்று காலை 9 மணி வரை ஒத்திவைக்கப்பட போவதாக அவை தலைவர் நேற்று உத்தரவிட்டார்.

அரங்கத்தையே கைகொட்டி சிரிக்க வைத்த ஷிவாங்கி – வேற லெவெலில் வெளியான குக் வித் கோமாளி ப்ரோமோ!!

மேலும் இன்றும் எதிர்க்கட்சிகளின் அமளி எதிரொலியாக இன்று காலை கூடிய மாநிலங்களவை வரும் 8ம் தேதி அன்று ஒத்திவைக்கப்பட போவதாக அறிவித்தனர். அதாவது வரும் திங்கள் கிழமை காலை 9 மணி வரை மாநிலங்களவை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதனை மாநிலங்களவை தலைவர் வெங்கையா நாயுடு உத்தரவிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here