பாரம்பரிய உடையில் விக்னேஷ் சிவன், நயன்தாரா – கல்யாணத்துக்கு ட்ரையாலா?? கலாய்க்கும் ரசிகர்கள்!!

0

”கூழாங்கல்” என்ற திரைப்படத்திற்காக சர்வதேச திரைப்பட விழாவில் வேஷ்டி சட்டையுடன் விக்னேஷ் சிவனும் சேலையுடன் நயன்தாராவும் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார் விக்னேஷ் சிவன்.

திரைப்பட விழா

தமிழ் திரையுலகில் அனைவரும் எதிர்பார்த்து காத்திருக்கும் திருமணம் என்றால் அது இயக்குனர் விக்னேஷ் சிவன் மற்றும் நடிகை நயன்தாராவின் திருமணம் தான். முன்னதாக திரைப்பட விருது வழங்கும் விழாவில் இவர்கள் இருவரும் காதலிப்பதாக அறிவித்திருந்தார் நயன்தாரா. அதன் பின்பு இருவரும் ஒன்றாக இணைந்து பல்வேறு நாடுகளுக்கு பயணப்பட்டு, புகைப்படங்களை சமூகவலைதளத்தில் பதிவிட்டு வந்தனர். இந்நிலையில் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா இருவரும் இணைந்து ரௌடி பிக்சர்ஸ் என்ற திரைப்பட தயாரிப்பு நிறுவனம் ஒன்றை நடத்தி வருகின்றனர்.

மலிவு விலையில் ரியல்மி V11 5ஜி ஸ்மார்ட்போன் – சீனாவில் அறிமுகம்!!

இயக்குனர் பி.எஸ்.வினோத்ராஜ் இயக்கத்தில் ரௌடி பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ”கூழாங்கல்”. இப்படத்தின் ட்ரைலர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களின் ஆதரவை பெற்றது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் டைகர் காம்படிசன் என்ற சர்வதேச திரைப்பட விருது விழாவுக்கு சென்றுள்ளது இத்திரைப்படம். இதற்கான விருது வழங்கும் விழா ரோட்டர்டாம் என்ற நகரில் நடந்து வருகிறது. இந்த விருது வழங்கும் விழாவில் இத்திரைப்படத்தின் குழுவுடன் நடிகை நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் கலந்து கொண்டுள்ளனர்.

Facebook  => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!

விழாவில் விக்னேஷ் சிவன் வெள்ளை வேஷ்டி மற்றும் சட்டையுடனும், மஞ்சள் நிற சேலையில் நயன்தாராவும் கலந்து கொண்டனர். இவர்கள் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியீட்டுள்ளார். இந்த புகைப்படத்தை ரசித்து வரும் மக்கள் இது திருமண ஒத்திகையா? என்று சமூகவலைதளத்தில் கேள்வி கேட்டு வருகின்றனர். விரைவில் வெளியாகப்போகும் இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here